கால்வாயில் விழுந்து இரு சிறுவர்கள் உயிரிழப்பு: இருவர் காயம்

14 செப்டெம்பர் 2026, 2:03 PM
கால்வாயில் விழுந்து இரு சிறுவர்கள் உயிரிழப்பு: இருவர் காயம்

ஷா ஆலம், செப் 14 : கூலிம், சுங்கை காராங்கான், தாமான் டேசா காயாங்கானில் இன்று இரவு இரு சிறுவர்கள் கால்வாயில் விழுந்து உயிரிழந்தனர்.

மேலும் இரு சிறுவர்கள் காயமடைந்தனர்.

இன்று இரவு சுமார் 7.30 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்தில், 12 வயதுடைய இரு சிறுவர்கள் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டனர்.

மேலும் 8 மற்றும் 11 வயதுடைய இரு சிறுவர்கள் காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

கூலிம் மாவட்ட போலீஸ் தலைவர், சூப்பிரண்டெண்ட் ஷாம்சுல் சின்ரிங் இந்தச் சம்பவத்தை உறுதிப்படுத்தினார்.

"சுங்கை காராங்கான் போலீஸ் நிலைய அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்றபோது, இரு சிறுவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதையும், மேலும் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததையும் கண்டறிந்தனர்," என்று அவர் தெரிவித்தார்.

இந்தத விபத்து எதனால் ஏற்பட்டது என்பது குறித்த உண்மைத் தகவல்களைக் கண்டறிய விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.