உணவகத்தில் மகளை எட்டி உதைத்த தந்தை : போலீசாரால் கைது

14 செப்டெம்பர் 2026, 1:39 PM
உணவகத்தில்  மகளை எட்டி உதைத்த  தந்தை : போலீசாரால் கைது

ஷா ஆலாம், செப் 14 - நேற்று உணவகமொன்றில் தனது மகளை எட்டி உதைத்த ஆடவரைப் போலீசார் கைது செய்திருக்கின்றனர்.

அந்த ஆடவர் கோத்தா பாரு போலீஸ் நிலையத்தில் சரணடைந்ததாகவும், மேற்விசாரணைக்காக தற்போது தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் கோத்தா பாரு மாவட்ட போலிஸ் தலைவர் மொஹமட் அஸ்மிர் டாமிரி தெரிவித்தார்.

அச்சம்பவம், 2001 சிறார் சட்டம் செக்க்ஷன் 31(1) ( a) பிரிவின் கீழ் விசாரிக்கப்படுகிறது.

டெலிபோர்ட்டில் உள்ள உணவகமொன்றில் சிறுமியை எட்டி உதைத்து ஆடவர் ஒருவர் கடுமையாக நடந்துக் கொண்ட காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டிருந்தது.

அந்த காணொளியை அந்த உணவகத்தின் உரிமையாளர் பதிவேற்றம் செய்திருந்தார்.

வைரலான அந்த காணொளி தொடர்பில் பொது மக்களிடமிருந்து புகார் பெறப்பட்டதாக மொஹமட் அஸ்மிர் டாமிரி தெரிவித்தார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.