தேசிய போலீஸ் துணைத் தலைவராக அப்துல் அசீஸ் நியமனம்

14 செப்டெம்பர் 2026, 9:18 AM
தேசிய போலீஸ் துணைத் தலைவராக அப்துல் அசீஸ் நியமனம்

ஷா ஆலம்,செப் 14 : புக்கிட் அமான் நிர்வாக இயக்குனர், டத்தோ ஸ்ரீ அப்துல் அஜீஸ் அப்துல் மஜித், போலீஸ் படையின் புதிய துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனம் கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.

கடந்த ஜூலை மாதம் கட்டாய ஓய்வு பெற்ற டான் ஸ்ரீ அயோப் கான் மைதீன் பிட்சைக்கு பதிலாக அப்துல் அஜீஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரதமரின் ஆலோசனையுடன் பேரரசர் இந்த நியமனத்திற்கு ஒப்புதல் அளித்திருப்பதாக உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைபுதீன் நசுத்தியோன் இஸ்மாயில், ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

"போலீஸ் துறையில் உள்ள நிபுணத்துவம் மற்றும் அனுபவத்தின் அடிப்படையில், அப்துல் அஜீஸ் தேசிய போலீஸ் துணைத் தலைவராக பணியாற்றுவதற்கான உயர் தகுதியையும் தலைமைத்துவ திறனையும் கொண்டுள்ளார்.

இந்த நியமனத்திற்கு அரசாங்கம் தனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறது," என்று அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டார்.

மலேசிய தேசிய பல்கலைக்கழகத்தில் (UKM) சமூக அறிவியல் முதுகலை (போலீஸ் ஆய்வுகள்) பட்டம் பெற்றவரான 59 வயதாகும் அப்துல் அஜீஸ், தனது பணிக்காலத்தில், நிர்வாகத் துறை, சிறப்புப் பிரிவு , குற்றப் புலனாய்வுத் துறை மற்றும் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றியுள்ளார்.

தனது நிபுணத்துவ அனுபவத்திற்கு ஏற்ப, அவர் சிறப்புப் பிரிவின் துணை இயக்குனர், போதைப்பொருள் தடுப்புத் பிரிவின் துணை இயக்குனர் மற்றும் பினாங்கு மாநில போலீஸ் துணை தலைவர் உள்ளிட்ட அரச மலேசிய போலீஸ் படையின் பல்வேறு முக்கியப் பதவிகளிலும் பணியாற்றியுள்ளார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.