ரேலா உறுப்பினர்களின் மணிக்கு 8 ரிங்கிட் அலவன்ஸ்: குறைந்தபட்ச ஊதியத்தைக் காட்டிலும் குறைவு

14 செப்டெம்பர் 2026, 7:16 AM
ரேலா உறுப்பினர்களின் மணிக்கு 8 ரிங்கிட் அலவன்ஸ்: குறைந்தபட்ச ஊதியத்தைக் காட்டிலும் குறைவு

ஷா ஆலம், செப் 14 : ரேலா (RELA) தன்னார்வ உறுப்பினர்களின், மணிக்கு 8 ரிங்கிட் கொடுப்பனவு (Elaun), தற்போதைய குறைந்தபட்ச ஊதிய வரம்பைக் காட்டிலும் குறைவாகும்.

அதையடுத்து நியாயமான கொடுப்பனவு விகிதத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென உள்துறை அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் வீதம் 24 நாட்கள் பணியாற்றும் ஒரு ரேலா (RELA) உறுப்பினர் மாதத்திற்கு 1,536 ரிங்கிட் மட்டுமே பெறுகிறார்.

இது தற்போதைய குறைந்தபட்ச ஊதிய விகிதமான 1,700 ரிங்கிட்டை விடக் குறைவு என அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைபுதீன் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.

உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைபுதீன் நசுத்தியோன் இஸ்மாயில் : படம் :-பெர்னாமா

அதே காலக்கட்டத்தில் ஒரு நாளைக்கு 12 மணி நேரம் வரை பணியாற்றும் உறுப்பினர்களுக்குக் கிடைக்கும் மொத்த கொடுப்பனவு தொகை 2,304 ரிங்கிட்டாகும்.

இது குறைந்தபட்ச ஊதிய விகிதத்தை விட சற்று மட்டுமே அதிகம் என்றும் அவர் கூறினார்.

அவர் இன்று இங்கு நடைபெற்ற உள்துறை அமைச்சின் மாதாந்திர கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்தார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.