தோம்பிற்குள் சிமெண்டால் மூடப்பட்ட மனித எலும்புக் கூடு கண்டுபிடிப்பு

13 செப்டெம்பர் 2026, 3:07 PM
தோம்பிற்குள் சிமெண்டால் மூடப்பட்ட மனித எலும்புக் கூடு  கண்டுபிடிப்பு

அலோர் காஜா,செப் 13 : அலோர் காஜா, மாச்சாப் நீர் குளத்துக்கு அருகில் , சரிவான பகுதியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட தோம்பு ஒன்றில் மனித எலும்புக் கூடு இருந்தது கண்டறியப்பட்டது.

நீள நிறத்திலான அந்த தோம்பினை, இன்று காலை மணி 11.40 அளவில் , அக்குளத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மூவரால் கண்டுபிடிக்கப்பட்டதாக அலோர் காஜா மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரீடெண்டன் அஹ்மாட் அபு பாகார் தெரிவித்தார்.

அந்த மூன்று நபர்களும், சந்தேகத்திற்குறிய வகையில் இருந்த அந்த தோம்பின் மேற்பகுதியை சற்று வெட்டியிருக்கின்றனர். சிமெண்ட் இடப்பட்ட அந்த தோம்பிற்குள் மனித எலும்பு கூடு இருந்ததைக் கண்டு அவர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்ததாக அவர் கூறினார்.

தொடக்க விசாரணையில், கண்டெடுக்கப்பட்ட அந்த எலும்பு கூடு அழுகி 3 வாரங்களுக்கும் மேலாகியிருக்கலாமென நம்பப்படுவதாக அஹ்மாட் தெரிவித்தார்.

எலும்பு கூடு மலாக்கா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, உயிரிழந்தது ஆணா பெண்ணா என அடையாளம் காணும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வேளையில், குடும்ப உறுப்பினர்கள் யாரும் காணாமல் போயிருந்தால், போலீசிடம் புகார் கொடுக்குமாறு அஹ்மாட் கேட்டுக் கொண்டார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.