ஷா ஆலாம் காட்பரி நிறுவனத்தின் RM9 கோடி முதலீடு : உற்பத்தியை அதிகரிக்கும் - மந்திரி பெசார்

12 செப்டெம்பர் 2026, 3:16 PM
ஷா ஆலாம் காட்பரி நிறுவனத்தின் RM9 கோடி முதலீடு : உற்பத்தியை அதிகரிக்கும் - மந்திரி பெசார்
ஷா ஆலாம் காட்பரி நிறுவனத்தின் RM9 கோடி முதலீடு : உற்பத்தியை அதிகரிக்கும் - மந்திரி பெசார்
ஷா ஆலாம் காட்பரி நிறுவனத்தின் RM9 கோடி முதலீடு : உற்பத்தியை அதிகரிக்கும் - மந்திரி பெசார்

ஷா ஆலாம், செப் 12 - சிலாங்கூர், ஷா ஆலாமில் உள்ள தனது 'காட்பரி' (Cadbury ) தயாரிப்பு ஆலையில், அந்நிறுவனம் 9 கோடி ரிங்கிட் மதிப்பில் புதிய 'கிரம்ப் கோபுரத்தை' (Crumb Tower) திறந்துள்ளது.

'மொண்டேலெஸ் மலேசியா' (Mondelēz Malaysia) நிறுவனத்தின் அந்த முதலீட்டின் வழி, உற்பத்தியை அதிகரித்து மலேசியா, தெற்காசிய சந்தையின் தேவையைப் பூர்த்திச் செய்யுமென, சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிரூடின் ஷாரி நம்பிக்கை தெரிவித்தார்.

" காட்பரி , மலேசியர்களுக்கு பரிட்சியமான சாக்லட் உணவு முத்திரையாகும்.

அந்த உணவுத் தயாரிப்பு நிறுவனம் ஷா ஆலாமில் 1974-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்த நீண்ட கால செயல்பாடு, மொண்டேலேஸ் நிறுவனம் சிலாங்கூர் மாநில முதலீட்டு சூழலின் மீது வைத்துள்ள தொடர்ச்சியான நம்பிக்கையைப் பிரதிபலித்திருக்கிறது" என அமிருடீன் கூறினார்.

முன்னதாக, அமிருடீன், மொண்டெலெஸ் நிறுவனத் தலைமையகத்தில் அதன் புதிய கிரம்ப் கோபுரத்தைத் திறந்து வைத்தார்.

அந்த கோபுர செயல்பாடு மற்றும் முதலீடு குறித்த விபரங்களை அவர் தமது ஃபேஸ்புக் அகப்பக்கத்தின் மூலம் பகிர்ந்துக் கொண்டார்.

அந்த புதிய கோபுரம் நவீன தொழில்நுட்பத்துடன் உயர் தானியக்க ஆற்றலைக் கொண்டுள்ளது. அந்த உயர்தர வசதி உற்பத்தி ஆற்றலை அதிகரித்து, 250 உள்நாட்டு தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பையும் உருவாக்கியுள்ளது. விநியோக சங்கிலியின் கீழ் மேலும் வர்த்தக வாய்ப்புகளையும் உருவாக்கியிருப்பதாக மந்திரி பெசார் கூறினார்.

தொழில்நுட்பமும் செயற்கை AI நுண்ணறிவும் வேலை முறையை மாற்றியமைத்துள்ளது. எனவே மக்கள் எதிர்காலத்துக்கான அந்த தொழில்நுட்பத் திறனைக் கற்றுக் கொள்வது அவசியமென அவர் மேலும் குறிப்பிட்டார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.