பண்ணைக் கழிவுகள், துர்நாற்றம் & ஈக்களை கட்டுப்படுத்த EM தொழில்நுட்பம்

12 செப்டெம்பர் 2026, 5:07 AM
பண்ணைக் கழிவுகள், துர்நாற்றம் & ஈக்களை கட்டுப்படுத்த EM தொழில்நுட்பம்

சபாக் பெர்னாம், செப். 12: பண்ணைகளிலிருந்து வெளியேறும் துர்நாற்றம், ஈக்கள் மற்றும் கழிவுப் பிரச்சனைகளை சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில் நிர்வகிக்க ‘Effective Microorganism’ எனப்படும் EM தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தலாம்.

இத்தொழில்நுட்பம் விவசாயிகளுக்கு மட்டுமின்றி, பண்ணைகளைச் சுற்றியுள்ள குடியிருப்புப் பகுதிகளிலும் தூய்மையான மற்றும் வசதியான சுற்றுச்சூழலை உருவாக்க உதவும் என MyBioStar நிறுவனத்தின் உரிமையாளர் முகமட் ஃபெசால் இட்ரிஸ் (66) தெரிவித்தார்.

இயற்கை நுண்ணுயிரிகளின் கலவையான EM தொழில்நுட்பத்தை கால்நடைகளின் கழிவுகள், கால்நடைத் தீவனம் மற்றும் குடிநீரில் பயன்படுத்த முடியும் என அவர் கூறினார்.

இந்த நுண்ணுயிரிக் கலவை கால்நடைக் கழிவுகளை விரைவாகச் சிதைக்கச் செய்வதுடன், துர்நாற்றத்துக்குக் காரணமான அமோனியா உருவாகுவதையும் குறைக்கும்.

இயற்கை மூலப்பொருட்களைப் பயன்படுத்தி EM தொழில்நுட்பம் தயாரிக்கப்படுவதால், இது பாதுகாப்பானதும் நடைமுறைக்கு ஏற்றதுமான முறையுமாகும் என ஃபெசால் தெரிவித்தார்.

மேலும், இந்தத் தொழில்நுட்பத்தைத் தோட்டத் துறையிலும் பயன்படுத்த முடியும். தோட்டங்களில் உருவாகும் விவசாயக் கழிவுகளை சிறந்த முறையில் நிர்வகிக்க முடிவதுடன், சிதைக்கப்பட்ட கரிமப் பொருட்கள் மீண்டும் மண்ணுக்குத் திரும்புவதால் மண்ணின் வளத்தையும் மீட்டெடுக்க முடியும் என அவர் தெரிவித்தார்.

இந்தத் தொழில்நுட்பத்தை வெற்றிகரமாகவும் பயனுள்ளதாகவும் செயல்படுத்துவதற்கு தொழில்நுட்பத்தை வழங்குவது மட்டுமே போதாது.

விவசாயிகள் மற்றும் பண்ணை நடத்துநர்களுக்கு முறையான கல்வி மற்றும் தொடர்ந்து வழிகாட்டுதல் வழங்கப்பட வேண்டும். இதன் மூலமே EM தொழில்நுட்பத்தை சரியான முறையில் பயன்படுத்தி அதிகபட்ச பலனைப் பெற முடியும் என ஃபெசால் வலியுறுத்தினார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.