கேமரனில் மலை ஏற்றத்தின்போது ஜெர்மனிய ஆடவர் உயிரிழப்பு

11 செப்டெம்பர் 2026, 4:43 PM
கேமரனில்  மலை ஏற்றத்தின்போது ஜெர்மனிய ஆடவர் உயிரிழப்பு

குவாந்தான், செப் 12 : கேமரன் மலை, தானா ரத்தாவில் நேற்று மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்தபோது, குழியில் விழுந்து 58 வயதுடைய ஜெர்மனி நாட்டு சுற்றுப் பயணி உயிரிழந்தார்.

முன்னாள் நீர்வழிப் பாதை எனக் கருதப்படும் ஒரு குழிக்குள் அந்த நபர் மயக்க நிலையில் கிடந்ததை மீட்புக் குழுவினர் கண்டறிந்ததாக பகாங் தீயணைப்பு மீட்புத் துறையின் பேச்சாளர் தெரிவித்தார்.

பின்னர் அவர் இறந்துவிட்டது உறுதிச் செய்யப்பட்டது.

மீட்புக் குழுவினர் சுமார் ஏழு கிலோமீட்டர் தூரம் மலையேற்றம் செய்த பின்னரே சம்பவ இடத்தை அடைந்ததாக அவர் கூறினார்.

மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த அந்தப் பயணியின் 57 வயது மனைவி பாதுகாப்பாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.