பட்டிமன்ற நடுவரும் தமிழறிஞருமான சாலமன் பாப்பையா காலமானார்

11 செப்டெம்பர் 2026, 10:46 AM
பட்டிமன்ற நடுவரும் தமிழறிஞருமான சாலமன் பாப்பையா  காலமானார்

மதுரை, செப் 11 : பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டுச் சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா வயது மூப்பு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 90.

மதுரை திருமங்கலம் அருகே உள்ள சாத்தங்குடியில் 1936ஆம் ஆண்டு சாலமன் பாப்பையா பிறந்தார். இவர் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த்துறை பேராசிரியராகப் பணிபுரிந்துள்ளார்.

பட்டிமன்றங்கள் மற்றும் பொது மேடைகளில் நகைச்சுவை கலந்த சாலமன் பாப்பையாவின் பேச்சுக்கு அதிக வரவேற்பு கிடைத்தது.

அந்த வரவேற்பு காரணமாக அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் உட்படப் பல நாடுகளில் பட்டிமன்றங்களை அவர் நடத்தி வந்துள்ளார்.

தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதையும் மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதையும் சாலமன் பாப்பையா பெற்றுள்ளார்.

இவர், திருக்குறள் உள்ளிட்ட பழந்தமிழ் இலக்கியங்களுக்கு உரை எழுதியிருக்கிறார்.

வகைantarabangsa

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.