RM240 கோடி போதைப் பொருள் ஆய்வகம் : ஐவருக்கு போலீஸ் வலைவீச்சு

11 செப்டெம்பர் 2026, 9:13 AM
RM240 கோடி  போதைப் பொருள்  ஆய்வகம் : ஐவருக்கு போலீஸ் வலைவீச்சு
RM240 கோடி  போதைப் பொருள்  ஆய்வகம் : ஐவருக்கு போலீஸ் வலைவீச்சு
RM240 கோடி  போதைப் பொருள்  ஆய்வகம் : ஐவருக்கு போலீஸ் வலைவீச்சு

ஷா ஆலம், செப் 11 : சிலாங்கூர், புஞ்சாக் ஆலாமில் (Puncak Alam) செயல்பட்ட மிகப்பெரிய போதைப்பொருள் தயாரிப்பு ஆய்வகத்துடன் தொடர்புடைய மேலும் நான்கு முதல் ஐந்து பேரை போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

அவர்களில் சிலர் வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றிருக்கலாம் என நம்பப்படுகிறது.

அந்த நபர்கள் அனைவரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவு ம், அவர்களைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறையின் இயக்குநர் டத்தோ ஹுசைன் உமர் கான் தெரிவித்தார்.

தேடப்பட்டு வரும் நபர்கள் அனைவரும் இதற்கு முன்னரும் போதைப்பொருள் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் என்று அவர் கூறினார்.

புஞ்சாக் ஆலாமில் உள்ள போதைப்பொருள் தயாரிப்பு ஆய்வகத்தில் நடத்தப்பட்ட சோதனையில், சுமார் 240 கோடி ரிங்கிட் மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்தத் தேடுதல் வேட்டை தீவிரமடைந்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் 15 -ஆம் தேதி நடத்தப்பட்ட 'ஒப் யூமினெஸ்' (Op Eumenes) சோதனையின் போது இந்த ஆய்வகத்தின் செயல்பாடுகள் முறியடிக்கப்பட்டன.

அந்தச் சோதனையில், போலீசார் திரவ மற்றும் தூள் வடிவிலான 13 டன்னுக்கும் அதிகமான எம்.டி.எம்.ஏ (MDMA) போதைப் பொருட்களையும், பிற போதைப் பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

மேலும், போலீசார் 1.04 கிலோகிராம் கஞ்சா, 880 கிராம் எரிமின் 5 (Erimin 5) மாத்திரைகள், 180 கிராம் கெட்டமின் (ketamine), 150 கிராம் யபா (yaba) மாத்திரைகள் மற்றும் 50 கிராம் மெத்தாம்பேட்டமைன் (methamphetamine) ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

முன்னதாக, சிரம்பானில் மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையின் போது போலீஸாரால் சுடப்பட்டு இறந்த நபர், இந்த ஆய்வகத்தின் பின்னணியில் இருந்த முக்கிய நபர் (mastermind) என நம்பப்படுகிறது.

விசாரணையில், அந்த நபர் இந்த போதைப்பொருள் கும்பலை வழிநடத்தியதுடன், வெளிநாட்டிலிருந்து உபகரணங்களை இறக்குமதி செய்வதற்கும், பிற உறுப்பினர்களைச் சேர்ப்பதற்கும் பொறுப்பாக இருந்துள்ளான் என்பது தெரிய வந்ததது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.