சாலையில் நீட்டியிருந்த இரும்பில் மோதி கார் கவிழ்ந்தது; பெண் காயம்

11 செப்டெம்பர் 2026, 8:17 AM
சாலையில் நீட்டியிருந்த இரும்பில் மோதி கார் கவிழ்ந்தது; பெண் காயம்

ஷா ஆலாம், செப் 11 : பெட்டாலிங் ஜெயாவில் இன்று காலை , சாலையில் இருந்த உயரமான இரும்புப் பொருளின் மீது மோதி, ஹோண்டா சிட்டி காரொன்று தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 46 வயது பெண்மணி ஒருவர் காயங்களுடன் உயிர் தப்பினார்.

இந்த விபத்து இன்று காலை சுமார் 7.10 மணியளவில், ஜாலான் காசிங் - ஜாலான் டெம்ப்ளர் சாலையில் உள்ள பிஎச்பி (BHP) எரிபொருள் நிலையத்திற்கு முன்னால் நிகழ்ந்ததாக கூட்டரசு போக்குவரத்து அமலாக்க புலனாய்வுத் துறை தெரிவித்தது.

தொடக்க விசாரணையில், காரின் இடது பக்க டயர், சாலையில் சற்று உயரமாக நீட்டிக்கொண்டிருந்த ஒரு பொருளின் மீது ஏறியுள்ளது. இதனால் காரின் அடிப்பகுதி அந்த இரும்பின் மீது மோதியதை அடுத்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது தெரியவந்தது.

இந்த விபத்தில் காரின் கண்ணாடி உடைந்ததில் ஓட்டுநரின் வலது காலில் காயம் ஏற்பட்டது. அவர் சிகிச்சைக்காக அசுந்தா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

முறையாகப் பராமரிக்கப்படாத சாலையின் இரும்புப் பொருளே இந்த விபத்துக்குக் காரணம் என்றும், இதனால் ஓட்டுநர் காரின் கட்டுப்பாட்டை இழந்துள்ளார் என்றும் போக்குவரத்துத் துறை தனது முதற்கட்ட விசாரணையில் குறிப்பிட்டுள்ளது.

விபத்துக்குள்ளான கார் பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் போக்குவரத்துப் பிரிவுக்குக் கொண்டு செல்லப்பட்டது

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.