புத்ராஜெயா, செப் 10 : 2027 சிலாங்கூர் வரவு செலவுத் திட்டத்தை வரைவதில், பருவநிலை மாற்றம், சுற்றுச் சூழல் பாதுகாப்பு, கல்வி, உயர் திறன் கொண்ட மனித மூலதனம், தொழில்நுட்ப மாற்றம் ஆகிய விவகாரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
பொருளாதார, மேம்பாட்டுத் துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் மற்றும் சார்புடைய அமைப்புகளைச் சேர்ந்தவர்களோடு நடத்தப்பட்ட பொருளாதார ஆலோசனைக் கூட்டத்தில் , ஆக்கப்பூர்வ கருத்துகள் பெறப்பட்டன.
அதில், கவனம் செலுத்தக் கூடியவையாக மேற்குறிப்பிட்ட விவகாரங்கள் அடையாளம் காணப்பட்டதாக, மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.
மலேசியப் பல்கலைக்கழகத்தின் ஆசியா - ஐரோப்பா கழகத்தின் நிர்வாக இயக்குநர் , பிரதமர் துறையின் பொருளாதார ஆலோசகர் நுர்ஹிஷாம் ஹுசேய்ன் ஆகியோருடன் நடத்தப்பட்ட அந்த பொருளாதார கலந்துரையாடலின் வழி, மாநில அரசாங்கம், நடப்பு சவால் மற்றும் முக்கியத்துவம் செலுத்தக் கூடிய நடவடிக்கைகள் குறித்த கருத்துகளை திரட்டியதாகவும் அவர் கூறினார்.
புத்ராஜெயா, லி மெரிடியன் தங்கும் விடுதியில் , 2027-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டக் கலந்துரையாடலில் கலந்துக் கொண்டப் பின்னர் அவர் இதனைத் தெரிவித்தார்.
அந்த கலந்துரையாடல் வழி பெறப்பட்ட கருத்துகள், நவம்பரில் தாக்கல் செய்யத் திட்டமிடப்பட்டிருக்கும் 2027 சிலாங்கூர் வரவு செலவுத் திட்டம் இறுதி வடிவம் காண்பதில் வழிகாட்டியாகப் பயன்படுத்தப்படும்.
இதற்கு முன்னர், சிலாங்கூர் அரசாங்கம், 2026 மாநில வரவு செலவுத் திட்டத்துக்கு 3.23 பில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கியது.





