ஜகார்த்தா போதைப் பொருள் கடத்தல் சம்பவம் : மற்றொரு மலேசிய விமானி கைது

9 செப்டெம்பர் 2026, 12:45 PM
ஜகார்த்தா போதைப் பொருள் கடத்தல் சம்பவம் :  மற்றொரு மலேசிய  விமானி கைது

குவாலா சிலாங்கூர், செப் 9 - போதைப் பொருள் கடத்தியதற்காக கடந்த ஜூலையில் ஜகார்த்தாவில் மலேசிய உதவி விமானி கைது செய்யப்பட்டதன் தொடர்பில் , போலிசார் மேலுமோர் ஆடவரைக் கைது செய்திருக்கின்றனர்.

கைது செய்யப்பட அந்நபரும் 30 வயது மதிக்கத்தக்க ஒரு விமானி என புக்கிட் அமான் போதைப் பொருள் குற்றப் புலனாய்வு துறையின் இயக்குநர் டத்தோ ஹுசேன் ஓமார் கான் தெரிவித்தார்.

கடந்த திங்கட்கிழமை கிள்ளான் பள்ளத்தாக்குப் பகுதியில் கைதான அந்த நபர், போதைப் பொருள் விற்பனையில் இருந்து கிடைக்கும் பணத்தை நிர்வகித்து வந்ததாக நம்பப்படுகிறது.

இந்நபருடன் சேர்த்து, இதுவரை அந்த போதைப் பொருள் கடத்தல் சம்பவம் தொடர்பில் எழுவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனிடையே கைதான அந்த விமானி வேறொரு விமான நிறுவனத்தைச் சேர்ந்தவர் என டத்தோ ஹுசேன் தெரிவித்தார்.

இதற்கு முன்பு, 25 கிலோகிராம் போதைப் பொருளைக் கடத்த முயன்றதாக, சுகார்ணொ- ஹட்டா அனைத்துலக விமான நிலையத்தில் , இந்தோனேசிய அதிகாரிகள் மலேசிய உதவி விமானியைக் கைது செய்தனர்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.