புக்கிட் ஜெலுத்தோங்கில் புதருக்குள் அழுகிய நிலையில் ஆடவரின் சடலம்

8 செப்டெம்பர் 2026, 3:31 AM
புக்கிட்  ஜெலுத்தோங்கில்  புதருக்குள்  அழுகிய நிலையில் ஆடவரின் சடலம்

ஷா ஆலாம், செப் 7 : இங்குள்ள புக்கிட் ஜெலுத்தோங், ஜாலான் பெர்சியாரான் பலாய்ரோங், யு8 (Jalan Persiaran Balairong U8) அருகே, புதர் பகுதியில் அழுகிய நிலையில் ஆடவர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதைப் போலீசார் உறுதிப்படுத்தினர்.

நேற்று மதியம் 2.45 மணியளவில் பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று மேற் விசாரணை நடத்தியதாக, ஷா ஆலாம் மாவட்ட போலீஸ் தலைவர் அசிஸ்டெண்ட் கமிஷனர் சாருடின் சாமா தெரிவித்தார்.

"முதற்கட்ட விசாரணையில், சம்பவ இடத்தில் இறந்தவரிடம் எந்தவொரு அடையாள ஆவணங்களும் இல்லாததால் அவருடைய அடையாளம் இன்னும் கண்டறியப்படவில்லை.

இறந்தவரின் உடல் அழுகிய நிலையில் இருந்ததால், உடலை உடற்கூறு ஆய்வு செய்ய முடியவில்லை. மேலும், சடலத்தின் நிலையை வைத்துப் பார்க்கும்போது அவர் இறந்து ஒரு வாரத்திற்கும் மேலாகியிருக்கலாம் என நம்பப்படுகிறது," என்று அவர்நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

இன்று மதியம் மணி 2-க்கு திட்டமிடப்பட்டுள்ள பிரேத பரிசோதனைக்காக சடலம் புஞ்சாக் ஆலாம், மாரா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் (UiTM) அல்-சுல்தான் அப்துல்லா மருத்துவமனையின் உடற்கூறியல் பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக சாருடின் கூறினார்.

இப்போதைக்கு இச்சம்பவம் திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.