'மாத்தா' கண்காட்சியில் சிலாங்கூரின் கவர்ச்சிகரமான சுற்றுலாத் திட்டங்கள்

6 செப்டெம்பர் 2026, 5:29 AM
'மாத்தா' கண்காட்சியில்  சிலாங்கூரின் கவர்ச்சிகரமான சுற்றுலாத் திட்டங்கள்
'மாத்தா' கண்காட்சியில்  சிலாங்கூரின் கவர்ச்சிகரமான சுற்றுலாத் திட்டங்கள்

கோலாலம்பூர், செப் 6: மாத்தா (MATTA) மலேசிய சுற்றுலா, பயண முகவர்கள் சங்கக் கண்காட்சியில், சிலாங்கூர் சுற்றுலாத்துறையின், 124 கண்காட்சியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

அந்த மிகப் பெரிய பங்கேற்பின் மூலம் சிலாங்கூர் மாநிலத்தின் பல்வேறு சுற்றுலா ஈர்ப்புகளை விளம்பரப்படுத்த முடிந்திருப்பதாக மாநில சுற்றுலாத்துறையின் தலைமை நிர்வாக அதிகாரி சுவா யீ லிங் தெரிவித்தார்.

"எங்களின் சுற்றுலா ஈர்ப்புகளில் சுற்றுச்சூழல் சுற்றுலா (ecotourism), விவசாயச் சுற்றுலா (agrotourism), கலை மற்றும் கலாச்சாரம், பொழுதுபோக்கு பூங்காக்கள், தங்கும் விடுதிகள், ரிசார்ட்டுகள், முகாமிடுதல் (camping) ஆகியவை அடங்கும் “ என அவர் கூறினார்.

மலேசிய அனைத்துலக வர்த்தகக் கண்காட்சி மையத்தில் (MITEC) நடைபெறும் மாத்தா கண்காட்சியின்போது அவர் இதனைத் தெரிவித்தார்.

பார்வையாளர்கள் உள்ளூர் சுற்றுலா ஈர்ப்புகள் மற்றும் அடையாளங்களின் தனித்துவத்தை நேரடியாக அனுபவிக்கும் வகையில் நடவடிக்கைகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சுவா கூறினார்.

"பலருக்கு கிளந்தானின் 'வாவ் புலான்' (Wau Bulan) தெரிந்திருக்கும், ஆனால் சிலாங்கூரில் உண்மையில் எங்களிடம் 'வாவ் கப்பல்' (Wau Kapal) உள்ளது. இங்கே பார்வையாளர்கள் வாவ் கப்பல் ஓவியம் வரையக் கற்றுக்கொள்ளலாம் மற்றும் அதை ஒரு நினைவுப் பரிசாக சாவிக்கொத்தாக மாற்றிக்கொள்ளலாம்," என்று அவர் கூறினார்.

பார்வையாளர்களின் வரவேற்பு குறித்துப் பேசிய அவர், சிலாங்கூர் சுற்றுலாத்துறைக்கு தள்ளுபடிகள் உட்பட சிறப்பு விலையில் பல்வேறு சுற்றுலாத் திட்டங்களை வழங்குவதற்கு மாத்தா கண்காட்சி தொடர்ந்து சிறந்த தளமாக விளங்கி வருகிறது என்றார்.

"ஏற்கனவே இங்கு வந்தவர்களுக்குத் தெரியும், 50 சதவீதம் வரை தள்ளுபடி மற்றும் பல இலவச பரிசுகள் மற்றும் மீட்டெடுக்கக்கூடிய வெகுமதிகளுடன் மிகவும் மதிப்புமிக்க சுற்றுலத் திட்டங்களை இங்கே பெற முடியும்," என்று அவர் கூறினார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.