மலேசிய அரசியலில் தலையிடவில்லை: ஹாடியின் குற்றச்சாட்டை மறுத்தது அமெரிக்கா

6 செப்டெம்பர் 2026, 4:49 AM
மலேசிய அரசியலில் தலையிடவில்லை: ஹாடியின் குற்றச்சாட்டை மறுத்தது அமெரிக்கா

கோலாலம்பூர்,செப் 6 : மலேசிய அரசியல் தலைமைத்துவத்தைத் தீர்மானிக்க, அமெரிக்கா ஒருபோதும் முயன்றதில்லை .

"அதற்கு மாறாகக் கூறப்படும் எந்தவொரு கூற்றும் முற்றிலும் தவறானது" என கோலாலம்பூரில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் தற்காலிக தூதர் டேவிட் எச். கேம்பிள் ஜூனியர் (David H. Gamble Jr.) தெரிவித்தார்.

தேசிய முன்னணி அரசாங்கத்தைக் கவிழ்த்து, ஆட்சியைப் பிடிக்கத் தங்களுக்கு அமெரிக்கப் பிரதிநிதி உதவ முன் வந்ததாக, பாஸ் கட்சியின் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ஹாடி அவாங் கூறியிருந்தார்.

அதை மறுத்து கோலாலம்பூரில் உள்ள மலேசிய தூதரகம் இந்த சுருக்கமான மறுப்பு அறிக்கையை வெளியிட்டது.

கடந்த 2014-ஆம் ஆண்டில் அப்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா மலேசியாவிற்கு வருகை தந்தபோது, பாஸ் கட்சி 'மக்கள் கூட்டணியில்' இருந்தது;

அப்போது மலேசியாவிற்கான அமெரிக்கத் தூதர் தன்னைச் சந்திக்கக் கோரியதாகவும் , பாஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளர் யார் என்று கேட்டதாகவும் அப்துல் ஹாடி கூறியிருந்தார்.

மலேசியாவின் அடுத்த பிரதமரைத் தீர்மானிப்பதில் அமெரிக்காவிற்கு என்ன அதிகாரம் இருக்கிறது என்று தான் கேள்வி எழுப்பியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நேற்று கிளந்தான், கோத்தா பாருவில் நடைபெற்ற பாஸ் கட்சியின் 72-வது ஆண்டு மாநாட்டின் நிறைவுரையின் போது அப்துல் ஹாடி அவ்வாறு பேசியிருந்தார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.