ஜார்ஜ் டவுன்'ஜியூ ஜெட்டி'-யில் பயங்கரத் தீ : 5 கடைகள் சாம்பல்

5 செப்டெம்பர் 2026, 2:54 AM
ஜார்ஜ் டவுன்'ஜியூ ஜெட்டி'-யில்  பயங்கரத் தீ :  5  கடைகள் சாம்பல்
ஜார்ஜ் டவுன்'ஜியூ ஜெட்டி'-யில்  பயங்கரத் தீ :  5  கடைகள் சாம்பல்

ஜார்ஜ் டவுன், செப்டம்பர் 5 : பினாங்கின் புகழ்பெற்ற பாரம்பரிய அடையாளப் பகுதியான 'ஜியூ ஜெட்டி'-யில் (Chew Jetty) இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் ஐந்து வர்த்தகத் தளங்கள் முற்றிலும் சாம்பலாகின.

நல்வினப்பயனாக இதில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை.

தீயணைப்புத் துறைக்கு அதிகாலை 1.08 மணிக்கு அழைப்பு வந்ததைத் தொடர்ந்து, அடுத்த இரு நிமிடங்களில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக, தீமுர் லாவுட் மாவட்டத்தின் வட்டாரம் 1-க்கான நடவடிக்கை அதிகாரி ருஸ்லி இப்ராஹிம் தெரிவித்தார்.

கார் பழுது பார்க்கும் பட்டறை, வெல்டிங் கடை, பழைய இரும்புக்கடை மற்றும் மர ஆலை உள்ளிட்ட 5 கடைகள் இந்தத் தீயில் பாதிக்கப்பட்டன.

தீயணைப்பு வீரர்களின் விரைவான நடவடிக்கையால், அருகில் இருந்த எரிபொருள் நிலையத்திற்கும், குடியிருப்புப் பகுதிகளுக்கும் தீ பரவாமல் தடுக்கப்பட்டது.

இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட 50 வயதுடைய தோ அய்க் ஆன் என்பவர், தான் கடந்த 30 ஆண்டுகளாக நடத்தி வந்த சட்டை அச்சிடும் நிறுவனம் முற்றிலும் அழிந்துவிட்டதாகவும், வாடிக்கையாளர்களின் நூற்றுக்கணக்கான ஆடைகள் தீயில் கருகிவிட்டதாகவும் தெரிவித்தார்.

மற்றொரு பாதிக்கப்பட்டவரான ஹாங் ஜிங் லியன் (60) என்பவர், 1997 முதல் தான் நடத்தி வந்த கார் சாயம் பூசும் கடை அழிந்ததில் சுமார் 10 லட்சம் ரிங்கிட் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகக் கூறினார்.

விபத்தின் போது கடையினுள் மெர்சிடிஸ் பென்ஸ், பிஎம்டபிள்யூ உள்ளிட்ட சொகுசு கார்கள் இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

யுனெஸ்கோ (UNESCO) உலக பாரம்பரியத் தளப் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஜியூ ஜெட்டி (Chew Jetty), பினாங்கின் மிகப்பழமையான நீர்நிலை கிராமங்களில் ஒன்றாகும்.

தீ விபத்துக்கான காரணம் மற்றும் சேத மதிப்பு குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.