கெசாஸ் நெடுஞ்சாலையில் 'பனிப்பொழிவா?' – பின்னணியில் சோப்புக் கழிவு

4 செப்டெம்பர் 2026, 6:27 AM
கெசாஸ் நெடுஞ்சாலையில் 'பனிப்பொழிவா?' – பின்னணியில் சோப்புக் கழிவு

ஷா ஆலம், செப் 4: நேற்று கெசாஸ் (KESAS) ஷா ஆலம் நெடுஞ்சாலையில், கிள்ளானிலிருந்து கோலாலம்பூர் நோக்கிய திசையில், கிலோமீட்டர் 30 முதல் KM30.5 வரையிலான பகுதியில் நுரை தோன்றியதற்கு சோப்புக் கழிவு சிந்தியதே காரணம் என நம்பப்படுகிறது.

கடந்த ஆகஸ்ட் 24-ஆம் தேதி கோத்தா கெமுனிங் மாற்றுப்பாதையில் இருந்து கிள்ளான் நோக்கிய கெசாஸ் நெடுஞ்சாலைக்குள் நுழைவதற்கு முன்பு, லாரி ஒன்றிலிருந்து இந்த சோப்பு சிந்தியிருக்கலாம் என நம்பப்படுவதாக , ஷா ஆலம் மாவட்ட போலீஸ் தலைவர் அசிஸ்டென்ட் கமிஷனர் சாருடின் சாமா தெரிவித்தார்.

"சம்பவம் நடந்த அன்றைய தினமே, தீயணைப்புத் துறையினர் அங்கு சிந்தியிருந்த சோப்புக் கழிவுகளின் மீது மரத்தூளைத் தூவி நடவடிக்கை எடுத்திருந்தனர்.

இருப்பினும், நேற்று பெய்த பலத்த மழையின் காரணமாக, அந்த சோப்புக் கழிவு சுமார் 500 மீட்டர் நீளத்திற்கு பெருமளவில் நுரையை ஏற்படுத்தியது," என்று அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டார்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, நெடுஞ்சாலை நிர்வாக நிறுவனம் இரண்டாவது முறையாக தூய்மைப் பணிகளை மேற்கொண்டு, மாலை 4.58 மணிக்கு அதனை நிறைவு செய்ததாக சாருடின் கூறினார்.

முன்னதாக, கெசாஸ் நெடுஞ்சாலையின் ஒரு பகுதியில் நுரை காணப்பட்டதை விவரிக்கும் சில வீடியோ பதிவுகள் சமூக ஊடகங்களில் வைரலாகின.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.