MRT3 திட்டம்: இடம்பெயரும் 31 குடியிருப்பாளர்களின் பிரச்சனைகள் ஆராயப்படும்

4 செப்டெம்பர் 2026, 3:41 AM
MRT3 திட்டம்: இடம்பெயரும் 31 குடியிருப்பாளர்களின் பிரச்சனைகள் ஆராயப்படும்

ஷா ஆலம், செப்.4: மாஸ் ராபிட் டிரான்சிட் 3 (MRT3) திட்டத்தின் பாதை அமைக்கும் பணிகளால் இடம்பெயர வேண்டிய தாமான் பக்தி பிளாட், பிளாக் டி பகுதியைச் சேர்ந்த 31 குடியிருப்பாளர்களின் பிரச்சனைகளை மாநில அரசு ஆராயவுள்ளது.

MRT3 திட்டத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து குடியிருப்பாளர்களின் கருத்துகளைக் கேட்டறிய விளக்கக் கூட்டம் நடத்தப்பட்டதாக மாநில உள்கட்டமைப்பு ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ இஷாம் ஹாஷிம் தெரிவித்தார்.

தற்போது அவர்கள் வசித்து வரும் வீடுகள் MRT3 திட்டத்தின் கட்டுமானப் பணிகளுக்குள் வருவதால், மொத்தம் 31 குடியிருப்பாளர்கள் இடம்பெயர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக இஷாம் கூறினார்.

இடம்பெயர்வு என்பது வெறுமனே குடியிருப்பை இழப்பது தொடர்பான விவகாரம் மட்டுமல்ல. அது குடியிருப்பாளர்களின் அன்றாட வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதையும் மாநில அரசாங்கம் கவனத்தில் கொள்ளும் என இஷாம் குறிப்பிட்டார்.

குடியிருப்பாளர்களின் குரலும் அவர்களின் பிரச்சனைகளும் சம்பந்தப்பட்ட தரப்புகளிடம் கொண்டு செல்லப்படும் என்று அவர் உறுதியளித்தார்.

ஒவ்வொரு விவகாரமும் குடியிருப்பாளர்களின் நலன் மற்றும் அவர்களது உரிமைகளைக் கருத்தில் கொண்டு முறையாக ஆராயப்படுவதை உறுதி செய்ய மாநில அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.