புடு இரவு விடுதியின் முன் சண்டை : 5 ஆடவர்கள் கைது

1 செப்டெம்பர் 2026, 2:41 PM
புடு இரவு விடுதியின்  முன் சண்டை :  5 ஆடவர்கள் கைது

கோலாலம்பூர், செப் 1: புடுவில் உள்ள இரவு விடுதி ஒன்றின் முன் நடந்த கைகலப்பில் ஈடுப்பட்ட சந்தேகத்தில் போலீசார் ஐவரைக் கைது செய்துள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12 மணியளவில் பேஸ்புக்கில், அந்த கைகலப்பு குறித்த 38 வினாடிகள் கொண்ட காணொளி சமூக ஊடகத்தில் வைரலாகியிருந்தது.

வைரலான அந்த வீடியோவை அடுத்து, 19 முதல் 30 வயதுக்குட்பட்ட ஐவர் கைது செய்யப்பட்டதாக வாங்சா மாஜு மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அன்னாஸ் சுலைமான் தெரிவித்தார்.

"சில நபர்களுக்கு இடையே ஏற்பட்ட தவறான புரிதலே இந்த மோதலுக்குக் காரணம் என்றும், அது பின்னர் அந்த இரவு விடுதிக்கு வெளியே ஒரு பெரிய சண்டையாக மாறியது என்றும் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது," என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

இச்சம்பவத்தின் போது பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் கருப்பு நிற பெரோடுவா மைவி (Perodua Myvi) காரையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளதாக அவர் கூறினார்.

"பதிவுகளைச் சரிபார்த்ததில், கைது செய்யப்பட்ட அனைத்து நபர்களுக்கும் வன்முறைக் குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் தொடர்பான முந்தைய குற்றப் பின்னணிகள் இருப்பது தெரியவந்தது.

விசாரணைக்கு உதவும் வகையில் அந்த ஐவர் நேற்று முதல் செப்டம்பர் 4 வரை ஐந்து நாட்களுக்கு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

"மேலும், தலைமறைவாக உள்ள இதர நபர்களைத் தேடும் பணியை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்," என்று அவர் கூறினார்.

இச்சம்பவம் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தவர்கள், வழக்கு விசாரணை அதிகாரி இன்ஸ்பெக்டர் வி. ஜெயச்சந்திரனை 03-9289 9222 அல்லது 010-214 6297 என்ற எண்களிலோ, கோலாலம்பூர் போலீஸ் ஹாட்லைனை (Hotline) 03-2115 9999 என்ற எண்ணிலோ அல்லது அருகில் உள்ள காவல் நிலையத்தையோ தொடர்பு கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.