ஷா ஆலாம், செப்டம்பர் 1 : நேற்றிரவு குவாலா சிலாங்கூர், பெஸ்தாரி ஜெயா, தாமான் பஞ்சாரானில் , உடலில் மின்சாரம் பாய்ந்து இளைஞர் உயிரிழந்தார்.
பாதிக்கப்பட்ட 15 வயது இளைஞர், ஃபுட்சால் விளையாட்டுக்கு மத்தியில் ஓய்வெடுத்தச் சமயம் , மின்கம்பத்தை தொட்டப் பின்னர், அங்கேயே சரிந்து விழுந்ததாக, குவாலா சிலாங்கூர் மாவட்டப் போலீஸ் தலைவர் சுப்ரிடெண்டன் அசாருடின் தஜுடின் தெரிவித்தார்.
அந்த இளைஞர் தொட்ட மின்கம்பத்திலிருந்து அவருக்கு மின்சாரம் பாய்ந்ததாக நம்பப்படுகிறது. அச்சம்பவம் தொடர்பில் இரவு மணி 10.32 -க்கு அவசர அழைப்பு கிடைத்ததாக அசாருடின் கூறினார்.
அந்த இளைஞர் சம்பவ இடத்திலே உயிரிழந்து விட்டதை சுகாதார அமைச்சின் அதிகாரி உறுதிப்படுத்தினார்.



