ஜாலான் காசிங்-NPE எதிர்வழிப் பாதை செப். 4 வரை மூடல்

1 செப்டெம்பர் 2026, 4:51 AM
ஜாலான் காசிங்-NPE எதிர்வழிப் பாதை செப். 4 வரை மூடல்

ஷா ஆலம், செப் 1 - தேசிய தினக் கொண்டாட்டம் மற்றும் பள்ளி விடுமுறையை முன்னிட்டு, ஜாலான் காசிங் (Jalan Gasing), ஜாலான் டெம்ப்ளர் (Jalan Templer) மற்றும் புதிய பந்தாய் விரைவுச்சாலை (NPE) ஆகிய பகுதிகளில் உள்ள எதிர்வழிப் பாதை (Contraflow lane) தற்காலிகமாக மூடப்படும்.

பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றம் (MBPJ) வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த சாலை மூடல் ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 4 வரை அமலில் இருக்கும்.

இப்பாதைகள் மீண்டும் செப்டம்பர் 7 முதல் வழக்கம் போல் செயல்படும் என்று அம்மன்றம் தெரிவித்தது.

பொதுமக்கள் தங்களது பயணங்களை அதற்குத் தகுந்தாற்போல் திட்டமிட்டுக்கொள்ளுமாறும், அதிகாரிகளின் உத்தரவுகளைப் பின்பற்றி நடக்குமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.