துப்பாக்கி சூடு நடத்தி கேபள் திருடனைத் துரத்திப் பிடித்தப் போலீசார்

31 ஆகஸ்ட் 2026, 3:08 PM
துப்பாக்கி சூடு நடத்தி கேபள் திருடனைத் துரத்திப் பிடித்தப் போலீசார்

ஷா ஆலம், ஆகஸ்ட் 31: கோலாலம்பூர், கெசாஸ் ( KESAS)நெடுஞ்சாலையில் 30 நிமிடங்கள், போலீசாரால் துரத்தப்பட்டு, 37 குற்றப் பின்னணிகளைக் கொண்ட கேபள் திருட்டு நபர் கைது செய்யப்பட்டார்.

அவருடன் இருந்த மற்றொரு நபர் தப்பியோடியதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ஃபாடில் மர்சூஸ் தெரிவித்தார்.

கெசாஸ் நெடுஞ்சாலையில் இருவர் பயணித்த ஃபோர்ட் ரேஞ்சர் ரக வாகனம் சந்தேகத்திற்குரிய வகையில் இருந்ததால், போலீசார் சோதனைக்காக அக்காரை நிறுத்தும்படி உத்தரவிட்டனர்.

இருப்பினும், காரிலிருந்தவர்கள், வாகனத்தை நிறுத்தாமல் அவான் பெசார் சாலைக் கட்டணச் சாவடியில் இருந்து ஸ்ரீ பெட்டாலிங் வரைச் சென்று தப்பிக்க முயன்றனர்.

30 நிமிடங்கள் நீடித்த இந்த துரத்தலின் போது, சுங்கை பெசி எரிபொருள் நிலையம் அருகே , காரிலிருந்தவர்கள் போலீசாரை மோத முயன்றதால் , அவர்களின் வாகன டயர்களை நோக்கி போலீசார் பலமுறை துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இறுதியாக, கட்டுப்பாட்டை இழந்த அந்த ஃபோர்ட் ரேஞ்சர் வாகனம் ஸ்ரீ பெட்டாலிங்கில் உள்ள ஜாலான் ஹாங் துவா 4 -இல் ஒரு மஸ்தா கார் மீது மோதி நின்றது .

இந்த சம்பவத்தில் 29 வயதுடைய உள்ளூர் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார், அவரிடம் ஏற்கனவே 37 முந்தைய குற்றப் பதிவுகள் இருப்பதோடு அவர் தேடப்படும் குற்றவாளி பட்டியலிலும் இடம்பெற்றுள்ளார்.

காரை ஓட்டி வந்த மற்றொரு நபர் தப்பியோடியதால் அவரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர் .

அந்த வாகனத்தை சோதித்த போது, கேபள் திருடப் பயன்படுத்தப்படும் பல்வேறு கருவிகள் மற்றும் திருடப்பட்ட கேபள்கள் பறிமுதல் செய்யப்பட்டன .

கைதான நபர் மீது கொலை முயற்சி, அபாயகரமாக வாகனத்தை ஓட்டியது, சொத்து சேதம் மற்றும் திருட்டு ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் நாளை தடுப்புக்காவல் கோரப்பட்டு விசாரணை நடத்தப்படும் .

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.