பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட் 31 - கோலாலம்பூர், செதாப்பாக்கில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 22-வது மாடியிலிருந்து ஆறாவது மாடியில் விழுந்து கிடந்த , 18 வயது கல்லூரி மாணவர் உயிரிழந்தார்.
ஜாலான் லங்காவியில் உள்ள ரெசிடென்சி தெராத்தாய் அடுக்குமாடி குடியிருப்பில் இன்று காலை மணி 8.50 -வாக்கில் அம்மாணவரின் உடலை, பாதுகாவலர் கண்டெடுத்தார்.
அதையடுத்து அச்சம்பவம் குறித்து போலீஸ் புகார் பெற்றதாக , வங்சா மாஜூ போலீஸ் தலைவர் அன்னாஸ் சுலைமான் தெரிவித்தார்.
உயிரிழந்த மாணவர், தான் பயிலும் ஜியோமாதிக்கா மலேசியா பல்கலக்கழகம் ஏற்பாடுச் செய்திருந்த அந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு காலை மணி 7.07-க்குத் திரும்பியது, சிசிடிவி மறைக்காணியில் தெரிய வந்தது.
அதன் பின்னர் அம்மாணவர் 22-வது மாடியிலிருந்து விழுந்ததை அந்த மறைக்காணிப் பதிவில் இடம்பெற்றிருந்ததாக அன்னாஸ் சுலைமான் தெரிவித்தார்.
அந்த மாணவர் சம்பவ இடத்திலே உயிரிழந்து விட்டது உறுதிச் செய்யப்பட்டது. திடீர் மரணமாகப் பதிவு செய்யப்பட்ட அந்த சம்பவத்தை போலீசார் விசாரித்து வருவதாக அன்னாஸ் சுலைமான அறிக்கையின் வாயிலாக தெரிவித்தார்.



