கோலாலம்பூர்:
நேற்று மதியம் மணி 3. 32 -க்கு தகவல் கிடைத்ததையடுத்து டேசா பார்க் சிட்டிக்கு விரைந்த போலீசார், வீட்டிலும் , அடுக்குமாடி குடியிருப்பின் கீழும் உயிரிழந்தவர்களின் உடல்களைக் கண்டெடுத்தனர்.
வீட்டின் கதவைத் திறந்து உள்ளேச் சென்ற போலிசும் தீயணைப்பு வீரர்களும் , வீட்டின் வெவ்வேறு பகுதிகளில் பெண் மற்றும் அவரது பிள்ளைகளின் உடல்களைக் கண்டெடுத்ததாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் ஃபாதில் மார்சூஸ் தெரிவித்தார்.
உயிரிழந்த 47 வயதுடைய பெண் மற்றும் அவரது 9 மற்றும் 7 வயதுடைய இரு பிள்ளைகளும் கழுத்தில் கடும் காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டதாக ஃபாதில் கூறினார்.
"சம்பவ இடத்தில் , உயிரிழந்தவர்களைக் காயப்படுத்த பயன்படுத்தப்ப்பட்ட கத்தியைப் போலீசார் கண்டெடுத்தனர்.
இந்த சம்பவம் குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது," என்று அவர் அறிக்கையின் வாயிலாகத் தெரிவித்தார்.



