மலாக்கா 'தீம் பார்க்'கில் நீர் சறுக்கின்போது நழுவி விழுந்து 2 பெண்கள் காயம்

25 ஆகஸ்ட் 2026, 2:46 PM
மலாக்கா 'தீம் பார்க்'கில் நீர் சறுக்கின்போது நழுவி விழுந்து 2 பெண்கள் காயம்

மலாக்கா, ஆகஸ்ட் 25: மலாக்கா ஆயர் குரோவில் உள்ள 'தீம் பார்க்' விளையாட்டுப் பூங்காவில், நீர் சறுக்கின்போது மிதவையிலிருந்து நழுவி விழுந்த இரு பெண்கள் காயமடைந்தனர்.

அச்சம்பவம் கடந்த சனிக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் நிகழ்ந்ததாக மத்திய மலாக்கா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஹலிம் அபாஸ் தெரிவித்தார்.

அச்சம்பவத்தால் 46, 31 வயதுடைய அவ்விரு பெண்களுக்கு முறையே தலையில் இரத்த உறைவு மற்றும் மூளை அதிர்வு ஏற்பட்டதாக அவர் கூறினார்.

அவ்விரு பெண்களும் தங்களது குடும்ப உறுப்பினர்கள் சிலருடன் அந்தத் 'தீம் பார்க்'கில் விடுமுறையைக் கழித்துக் கொண்டிருந்தபோது இந்த அசம்பாவிதம் நிகழ்ந்தது.

அவர்கள் இரட்டை மிதவையில் எதிருக்கெதிராக அமர்ந்து நீர்ச் சறுக்கியபோது , சரிவுப் பாதையில் மிதவை திடீரென ஏதோ ஒன்றில் மோதியதால், அவர்களில் ஒருவரது தலை சரிவுப் பாதையின் சுவரில் மோதியது.

அதன் பின்னர் இருவருமே மயக்கமடைந்தனர் என்றும் ஹலிம் கூறினார்.

பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாகச் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு விரைந்து கொண்டு செல்லப்பட்டனர்.

அங்கு 46 வயதுப் பெண்ணுக்குச் செய்யப்பட்டட பரிசோதனையில், அவரது தலையின் வலது பக்கத்தில் இரத்த உறைவு இருப்பதும், தாடை மற்றும் வலது முழங்காலில் காயங்கள் இருப்பதும், நெஞ்சுப் பகுதியில் வலி இருப்பதும் கண்டறியப்பட்டது.

31 வயதுப் பெண்ணுக்கு மூளை அதிர்வு மற்றும் உடல் வலி ஏற்பட்டுள்ளதோடு, தமக்கு நேர்ந்த விபத்து குறித்த சம்பவங்களை அவரால் நினைவுகூர முடியவில்லை.

இதற்கிடையில், மாநிலத்தில் உள்ள அனைத்து தீம் பார்க் மற்றும் சுற்றுலாத் தலங்களின் உரிமையாளர்கள் வருகையாளர்களின் பாதுகாப்பு அம்சங்களுக்கு எப்போதும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என மலாக்கா சுற்றுலா விளம்பரப் பிரிவு மேலாளர் நஸ்ருல் அகமத் நினைவுறுத்தினார்.

அவர்களது வளாகத்தில் உள்ள வசதிகள், தீம் பார்க் விளையாட்டுகள் மற்றும் உபகரணங்களின் பரிசோதனை மற்றும் பராமரிப்புப் பணிகள், எப்போதும் பாதுகாப்பாகவும் நல்ல நிலையிலும் செயல்படுவதை தொடர்ச்சியாக உறுதி செய்யய வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுப் பயணிகள், குறிப்பாக வார இறுதி நாட்கள் அல்லது நீண்ட விடுமுறை நாட்களில் குவியும் பல சுற்றுலாத் தலங்களை மலாக்கா மாநிலம் கொண்டிருப்பதால் இது மிகவும் முக்கியமானதாகும்.

மலாக்காவில் அவர்கள் கழிக்கும் விடுமுறை, அவர்களுக்கு ஒரு மோசமான அல்லது கசப்பான அனுபவமாக மாறுவதை நாங்கள் விரும்பவில்லை," என்று அவர் கூறினார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.