புத்ராஜெயா, ஆகஸ்ட் 21 — புத்ராஜெயா, பெர்சியாரான் செலாத்தான் சாலையின் 9-வது கிலோமீட்டரில் நேற்றிரவு வாகனம் மோதியதில் இரு சைக்கிளோட்டிகள் உயிரிழந்ததாக புத்ராஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஐடி ஷாம் முகமட் (ACP Aidi Sham Mohamed) தெரிவித்தார்.
இன்று வெளியிட்ட அறிக்கையில், இவ்விபத்து இரவு 10.15 மணிக்கு நிகழ்ந்ததாக ஐடி ஷாம் கூறினார்.
விபத்தில் 40 வயது மதிக்கத்தக்க உள்ளூர் நபர் ஓட்டி வந்த வாகனமும், 40, 30 வயது மதிக்கத்தக்க இரு மிதிவண்டி ஓட்டுநர்களும் சம்பந்தப்பட்டிருந்தனர்.
"ஆரம்பக்கட்ட விசாரணையில், அந்த வாகனம் சாலையின் நடுவரிசையில் (middle lane) இருந்து இடது வரிசைக்கு (left lane) மாறியபோது, இரு சைக்கிளோட்டிகள் மீது மோதியது தெரிய வந்தது.
"இந்த மோதலின் விளைவாக, இரு சைக்கிளோட்டிகளும் முகம் மற்றும் தலையில் ஏற்பட்டட பலத்த காயங்கள் காரணமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டதாக," அவர் கூறினார்.
1987 சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் 41(1)-பிரிவின் கீழ் விசாரணைகள் தொடர்வதாக ஐடி ஷாம் தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் குறித்து தகவல் தெரிந்த பொதுமக்கள் , புத்ராஜெயா போக்குவரத்து போலீஸ் நிலையத்தை 03-8886 2138 என்ற எண்ணிலோ அல்லது அருகிலுள்ள ஏதேனும் ஒரு காவல் நிலையத்தையோ தொடர்பு கொண்டு விசாரணைக்கு உதவுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.



