'ராக்கி' நீதிமன்ற வழக்கு : பொது மக்கள் ஒன்றுக் கூட வேண்டாமென அறிவுறுத்து

19 ஆகஸ்ட் 2026, 8:14 AM
'ராக்கி' நீதிமன்ற வழக்கு : பொது மக்கள் ஒன்றுக் கூட வேண்டாமென அறிவுறுத்து

ஷா ஆலாம், ஆகஸ்ட் 19 - 'ரோக்கி'வளர்ப்பு நாய் உயிரிழந்த சம்பவம், நாளை கிள்ளான் நீதிமன்றத்துக்கு கொண்டு வரப்படும் நிலையில் , அந்த நீதிமன்ற வளாகத்திற்கு முன் பொது மக்கள் ஒன்றுகூடவோ ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவோ வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

போலீஸ் அச்சம்பவத்தை விசாரித்துள்ளது. அந்த விசாரணையில், அச்சம்பவம் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட வேண்டுமென உறுதியாகியது.

இது எந்தவோர் தரப்புக்கும் சாதகமாக போலீஸ் நடந்துக் கொள்ளவில்லை என்பதைக் காட்டுவதாக சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ ஷாசெலி காஹார் தெரிவித்தார்.

தற்போது அதற்கான சட்ட நடைமுறைகள் நடைபெற்று வருகின்றன. அந்த சட்ட நடைமுறை மீது பொது மக்கள் நம்பிக்கை கொள்ள வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்.

மேலும், ஆர்ப்பாட்டமோ ஒன்றுகூடவோ வேண்டிய நிலைக்கு இந்த விவகாரத்தை பெரிதுப்படுத்த வேண்டாமெனவும் அவர் அறிவுறுத்தினார்.

எனினும், சம்பந்தப்பட்ட வழக்கு நடைமுறையைக் காண பொது மக்கள் நீதிமன்றத்திற்கு வரலாம். அதே நேரத்தில் பொது அமைதியைக் காத்து அதிகாரத்துவ தரப்பின் கட்டளையைப் பின்பற்றி அவர்கள் நடந்துக் கொள்ள வேண்டுமென அவர் கூறினார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.