2026 SPM தேர்வு நவம்பர் 23 தொடங்கி டிசம்பர் 17 வரை நடைபெறும்

18 ஆகஸ்ட் 2026, 2:40 PM
2026 SPM தேர்வு நவம்பர்  23 தொடங்கி டிசம்பர்  17 வரை நடைபெறும்
2026 SPM தேர்வு நவம்பர்  23 தொடங்கி டிசம்பர்  17 வரை நடைபெறும்
2026 SPM தேர்வு நவம்பர்  23 தொடங்கி டிசம்பர்  17 வரை நடைபெறும்

புத்ராஜெயா, ஆகஸ்ட் 18 - 2026-ஆம் ஆண்டிற்கான SPM - எஸ்.பி.எம் எழுத்துப்பூர்வ தேர்வுகள் வரும் நவம்பர் 23-ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 17-ஆம் தேதி வரை நடைபெறும் என்று கல்வி அமைச்சு இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

மலாய் மொழி வாய்மொழித் தேர்வு அக்டோபர் 26 முதல் 29 வரையிலும்,

அதனைத் தொடர்ந்து ஆங்கில மொழி வாய்மொழித் தேர்வு நவம்பர் 2 முதல் 5 வரையிலும் நடத்தப்படும்.

மேலும், அறிவியல் செய்முறைத் தேர்வுகள் நவம்பர் 16 முதல் 18 வரை நடைபெறும் வேளையில், மலாய் மொழி கேட்டல் தேர்வு நவம்பர் 30-ஆம் தேதியும்,

ஆங்கில மொழி கேட்டல் தேர்வு டிசம்பர் 1-ஆம் தேதியும் நடைபெறுமென அறிவிக்கப்பட்டது.

இவ்வாண்டு எஸ்பிஎம் தேர்வு எழுதுவதற்காக நாடு முழுவதும் உள்ள 3,334 தேர்வு மையங்களில் மொத்தம் 420,879 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர்.

இதற்கான முழுமையான தேர்வு கால அட்டவணையைத் தேர்வு வாரியம் விரைவில் வெளியிடும்.

வகைpendidikan

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.