ஆகஸ்ட் 26 வரை காஜாங் அரங்கின் சதுக்கம் தற்காலிகமாக மூடப்படுகிறது

10 ஆகஸ்ட் 2026, 2:21 PM
ஆகஸ்ட்  26 வரை காஜாங்  அரங்கின் சதுக்கம் தற்காலிகமாக மூடப்படுகிறது

காஜாங், ஆகஸ்ட் 10 - பழுதுபார்ப்பு பணிகளுக்காக இன்று தொடங்கி ஆகஸ்ட் 26-ஆம் தேதி வரை காஜாங் அரங்க சதுக்கம் தற்காலிகமாக மூடப்படும்.

அந்த சதுக்கத்தில் , பழுதுபார்ப்பு பணிகளுடன், சிலாங்கூர் மாநில மெர்டேக்கா தினத்துக்கு முந்திய கொண்டாட்டத்திற்கான முன்னேற்பாட்டு நடவடிக்கைகளும் எடுக்கப்படவுள்ளன.

அதையடுத்து , இந்த தற்காலிக மூடல் குறித்து பொது மக்கள் அறிந்துக் கொள்ளும்படியும் , அக்கால கட்டத்தில் அப்பகுதியில் எந்தவொரு நடவடிக்கையையும் மேற்கொள்ள வேண்டாமெனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

தமது ஃபேஸ்புக் பதிவின் மூலம், இந்த இடையூறுக்காக வருத்தம் தெரிவித்த காஜாங் நகராண்மைக் கழகம் , இவ்விவகாரத்தில் பொது மக்களின் ஒத்துழைப்பையும் எதிர்ப்பார்ப்பதாகக் குறிப்பிட்டது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.