சைபர்ஜெயா, ஜூலை 28: பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் வாட்ஸ்அப் தளத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட 'PMX AI' என்ற செயற்கை நுண்ணறிவு (AI) அவதார் தற்பொழுது மேம்படுத்தப்பட்டு வருகிறது.
இன்று இங்கு நடைபெற்ற 'AI மலேசியா' தொடக்க விழாவிற்குப் பிறகு ஊடகங்களைச் சந்தித்த அன்வார், "நாங்கள் இன்னும் இதில் பணியாற்றி வருகிறோம். நான் இதை இப்போதுதான் சோதித்துப் பார்த்தேன்" என்று கூறினார்.
கடந்த சனிக்கிழமை (ஜூலை 18) பொதுமக்களின் பயன்பாட்டிற்காகத் திறக்கப்பட்ட இந்த அவதார், அறிமுகப்படுத்தப்பட்ட சில நாட்களிலேயே தற்காலிகமாகப் பின்வாங்கப்பட்டது.
'PMX AI' என்பது பிரதமரின் 'டிஜிட்டல் இரட்டை' (digital twin) ஆகும். அந்த அவதாரின் மூலம் பொதுமக்கள் தங்களின் கருத்துகள், கவலைகள் மற்றும் கோரிக்கைகளை நேரடியாகப் பகிர்ந்துகொள்ள முடியும்.



