RM500 பில்லியன் பொருளாதார இலக்கை சிலாங்கூர் முன்கூட்டியே எட்டக் கூடும்

28 ஜூலை 2026, 7:04 AM
RM500 பில்லியன் பொருளாதார இலக்கை சிலாங்கூர் முன்கூட்டியே எட்டக் கூடும்
RM500 பில்லியன் பொருளாதார இலக்கை சிலாங்கூர் முன்கூட்டியே எட்டக் கூடும்
RM500 பில்லியன் பொருளாதார இலக்கை சிலாங்கூர் முன்கூட்டியே எட்டக் கூடும்
RM500 பில்லியன் பொருளாதார இலக்கை சிலாங்கூர் முன்கூட்டியே எட்டக் கூடும்

ஷா ஆலம், ஜூலை 28: சிலாங்கூர் மாநிலம் அதன் பொருளாதார இலக்கான RM500 பில்லியன் தொகையை திட்டமிட்டதை விட மிக விரைவாக எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதன் மூலம் அந்த பொருளாதாரச் சாதனையைப் பதிவு செய்யும் நாட்டின் முதல் மாநிலமாக சிலாங்கூர் உருவெடுக்கும்.

மாநிலத்தின் தற்போதைய வலுவான பொருளாதார வளர்ச்சி, முதலீட்டாளர்கள் மற்றும் தொழில்துறையினரின் தொடர்ச்சியான நம்பிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் அந்த கணிப்பு அமைந்துள்ளதாக டத்தோ மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

இன்று நடைபெற்ற சிலாங்கூர் மாநில புள்ளிவிபர மன்றக் கூட்டத்தில் (MSDNgW), சிலாங்கூரின் பொருளாதார செயல்திறன் குறித்த அறிக்கையின் தாக்கலின்போது போது மலேசியாவின் துணைத் தலைமை புள்ளிவிவர அதிகாரி வான் முகமட் ஷஹ்ருல்நிஜாம் வான் முகமட் நஜூரி இந்தத் தகவலைப் பகிர்ந்து கொண்டதாக அவர் குறிப்பிட்டார்.

"சிலாங்கூர் மாநிலம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 26.5 சதவீத பங்களிப்பை வழங்கி, மலேசிய பொருளாதாரத்தின் மிகப்பெரிய பங்களிப்பாளராகத் தொடர்ந்து திகழ்கிறது.

மேலும், இது 6.3 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்து, தேசிய வளர்ச்சி வீதமான 5.2 சதவீதத்தை விட அதிகமாக உள்ளது.

"சேவை மற்றும் உற்பத்தித் துறைகள் சிலாங்கூர் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒட்டுமொத்தமாக 89.3 சதவீத பங்களிப்பை வழங்கி, மாநில பொருளாதாரத்தின் முக்கிய உந்துசக்தியாகத் தொடர்ந்து விளங்குகின்றன," என்று அவர் தமது பேஸ்புக் பதிவில் பதிவிட்டுள்ளார்.

இந்த சாதனை மாநிலத்தின் வலுவான மற்றும் பொருளாதார கட்டமைப்பைப் பிரதிபலிக்கிறது என்றும், நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் சிலாங்கூரின் முன்னணி நிலையை மேலும் வலுப்படுத்துகிறது என்றும் அமிருடின் கூறினார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.