இந்திய இளைஞர்களின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி: கல்வி அமைச்சர் ராஜினாமா!

25 ஜூலை 2026, 10:54 AM
இந்திய இளைஞர்களின் போராட்டத்திற்கு கிடைத்த  வெற்றி:  கல்வி அமைச்சர் ராஜினாமா!
இந்திய இளைஞர்களின் போராட்டத்திற்கு கிடைத்த  வெற்றி:  கல்வி அமைச்சர் ராஜினாமா!

புது டில்லி, ஜூலை 25 - தேர்வு வினாத்தாள் கசிவிற்குப் பொறுப்பேற்றுத் தான் பதவி விலகியிருப்பதாக இந்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று (சனிக்கிழமை) தெரிவித்தார்.

அவர் பதவி விலக வேண்டும் என்று நாடு முழுவதும் போராடி வந்த இளைஞர்களுக்கு, அந்த அறிவிப்பு ஒரு பெரிய வெற்றியாக அமைந்துள்ளது.

தலைநகர் புது டில்லியில் போராட்டத் தலைவர்கள் அமைச்சர்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த சில மணி நேரங்களே இருந்த நிலையில், அமைச்சர் 'X' சமூக ஊடகத் தளத்தில் தமது பதவி விலகலை அறிவித்தார்.

"நாட்டின் இளைஞர்களின் லட்சியங்கள், உணர்வுகள் மற்றும் நியாயமான எதிர்பார்ப்புகளை நான் ஆழமாக மதிக்கிறேன்" என்றும் அவர் தமது பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்தச் செய்தி பரவியவுடன், மத்திய டில்லியிலும் பிற இடங்களிலும் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்களிடையே பெரும் மகிழ்ச்சி ஆரவாரம் ஏற்பட்டது.

"நாங்கள் சாதித்துவிட்டோம்," என்று காக்ரோச் ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜீத் திப்கே, போராட்ட மைதானத்தில் கூடியிருந்தவர்களின் பலத்த ஆரவாரத்திற்கு மத்தியில் கூறினார்.

கடந்த மே மாதம் நடைபெற்ற,மருத்துவக் கல்லூரி நுழைவுக்கான நீர் தேர்வின் வினாத்தாள் கசிவை அடுத்து, தேர்வு முடிவுகளை ரத்து செய்து, அரசாங்கம் மறுதேர்வுக்கு உத்தரவிட்டது.

இதனால் சுமார் 20 லட்சம் இளைஞர்கள் பாதிக்கப்பட்டனர்.

அதைக் கண்டித்து இளைஞர்களால் வழிநடத்தப்படும் "காக்ரோச்" இயக்கத்தின் ஆதரவாளர்கள் ஜூன் மாதம் முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஆனால், கடந்த திங்கட்கிழமை நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாகச் செல்ல முயன்ற நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்களைக் கலைக்கப் போலீசார் தடியடி நடத்தியதோடு, கண்ணீர் புகைக் குண்டுகளையும் பயன்படுத்தியதில் பல மாணவர்கள் காயமடைந்தனர்.

இதனால் மக்கள் மத்தியில் கோபம் கொந்தளித்தது.

வகைantarabangsa

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.