கொம்தாரின் 68-வது மாடியில் இருந்து இளைஞர் விழுந்து உயிரிழப்பு

25 ஜூலை 2026, 2:12 AM
கொம்தாரின் 68-வது மாடியில் இருந்து இளைஞர் விழுந்து உயிரிழப்பு

ஜார்ஜ் டவுன், ஜூலை 25 : நேற்று மதியம் கோம்தார் (Komtar) கட்டடத்தின் மேல் மாடியில் இருந்து கீழே இருந்த மேடைக் கூரையின் (podium roof) மீது விழுந்து 18 வயது மாணவர் ஒருவர் உயிரிழந்தார் .

அந்த இளைஞர் அக்கட்டடத்தின் 68-வது மாடியில் இருந்து கீழே விழுந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

அவர் கண்டெடுக்கப்பட்ட போது, தீம் பார்க் (theme park) நுழைவுக்கான மணிக்கட்டுப் பட்டை (wristband) ஒன்றை அணிந்திருந்தார்

ஜாலான் மெகசின் பகுதியில் உள்ள இந்த கொம்தார் கட்டடத்தில் நடந்த இச்சம்பவம் குறித்து, மதியம் 4.17 மணிக்கு தீயணைப்பு - மீட்புத் துறைக்கு அவசர அழைப்பு வந்ததாக அதன் நடவடிக்கைப் பிரிவின் உதவி இயக்குநர் ஜான் சாகுன் பிரான்சிஸ் தெரிவித்தார்.

கீழே கொண்டு வரப்பட்ட பாதிக்கப்பட்ட நபர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதை சுகாதார அமைச்சின் அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

பின்னர் அவரது உடல் அடுத்தகட்ட நடவடிக்கைக்காக போலிசிடம் ஒப்படைக்கப்பட்டதாக அவர் கூறினார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.