நியூ யோர்க்,ஜூலை 16 - நியூ யோர்க்கில், பிளாஸ்டிக் பேனா ஒன்று ஏலத்தில் 8 லட்சத்து 57 ஆயிரத்து 600 அமெரிக்க டாலருக்கு விலை போயுள்ளது.
உண்மையில் இது சாதாரண ஒரு பேனா தான் ! ஆனால் அதனைப் பயன்படுத்தியவரோ, பயன்படுத்திய நோக்கமோ அசாதரணமானது.
அப்பல்லோ 11 விண்கலத்தின் மின்சுற்று உடைந்து, விண்வெளி வீரர்கள் நிலவிலேயே சிக்கிக் கொள்ளும் அபாயம் ஏற்பட்டபோது, அதன் ஆற்றலை மீட்டெடுக்க பஸ் ஆல்ட்ரின் (Buzz Aldrin) பயன்படுத்திய ஒரு சாதாரண பிளாஸ்டிக் பேனா தான் அது.
ஜூலை 1969-இல் நிலவில் கால் பதித்த இரண்டாவது மனிதரான பஸ் ஆல்ட்ரின், தானும் நீல் ஆம்ஸ்ட்ராங்கும் நிலவிலேயே நிரந்தரமாகச் சிக்கிக் கொள்வதில் இருந்து தங்களைக் காப்பாற்றிக்கொள்ள இந்த வெள்ளி நிற 'துரோ ராக்கெட்' (Duro Rocket) பிளாஸ்டிக் பேனாவைப் பயன்படுத்தி இருந்தார்.
அவ்விருவரும் பூமி திரும்ப உயிர் காத்த அந்த பேனாவின் மதிப்பு தற்போது ஏலத்தில் வாய் பிளக்க வைத்துள்ளது.



