14 வயதிலேயே வகை 2 நீரிழிவு : சுகாதார அமைச்சு எச்சரிக்கை!

16 ஜூலை 2026, 7:19 AM
14 வயதிலேயே வகை 2 நீரிழிவு : சுகாதார அமைச்சு  எச்சரிக்கை!

கோலாலம்பூர், ஜூலை 16 - தொற்றா நோய்களின் பாதிப்பு, குறிப்பாக வகை 2 நீரிழிவு நோயின் (Type 2 Diabetes) பாதிப்பு தற்போது 14 வயதினர் மத்தியில் ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இது நாட்டின் இளைஞர்களின் ஆரோக்கிய நிலை குறித்த ஆரம்பகால எச்சரிக்கை என சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சுல்கிப்லி அஹ்மட் தெரிவித்தார்.

தேசிய நீரிழிவு பதிவேட்டின் (NDR) தரவுகளின்படி, 2024-ஆம் ஆண்டில் 1,926 புதிய நீரிழிவு பாதிப்புகள் பதிவாகின.

2025-ஆம் ஆண்டில் அந்த எண்ணிக்கை 1,932-ஆக உயர்ந்துள்ளது மிகவும் கவலையளிக்கும் போக்கைக் காட்டுவதாக அமைச்சர் கூறினார்.

இதனிடையே, இவ்வாண்டின் முதல் ஆறு மாதங்களில் (ஜூன் 2026 வரை) 660 புதிய சம்பவங்கள் பதிவாகின.

இந்த எண்ணிக்கை, வகை 2 நீரிழிவு நோய் இனி பெரியவர்களை மட்டுமே பாதிக்கும் நோய் அல்ல, மாறாக 30 வயதிற்குட்பட்ட பதின்ம வயதினர் மற்றும் இளைஞர்களையும் பாதிக்கத் தொடங்கியுள்ளது என்பதை நிரூபிக்கிறது என்று அமைச்சர் மக்களவையில் குறிப்பிட்டார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.