ஷா ஆலாம், ஜூலை 15 - பள்ளிக்கூடத்திற்குள் கூர்மையான ஆயுதங்கள் கொண்டு வரப்படுவதைத் தடுக்க, பாதுகாப்பு ஸ்கென்னர் கருவியைப் பொருத்தும் பரிந்துரையை சிலாங்கூர் மாநில அரசாங்கம் பரிசீலிக்கின்றது.
அப்பரிந்துரை பரிசீலிக்கப்பட்டு வரும் வேளை, அந்தக் கருவியைப் பொருத்துவது உட்பட பராமரிப்பதற்கான உயர்வான செலவையும் கருத்தில் கொள்ள வேண்டியிருப்பதாக மெந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.
அக்கருவியைப் பராமரிப்பதற்கு பெற்றோர் ஆசிரியர் சங்கம் மற்றும் பள்ளிக்கூட தரப்பின் ஒத்துழைப்பு அவசியம். எனினும், நிதியாற்றல் உள்ள பள்ளிக்கூடங்கள், டாமான்சாரா உத்தாமா இடைநிலைப் பள்ளிக் கூடத்தைப் போன்று சொந்தமாக அந்த கருவியைப் பொருத்திக் கொள்ளலாமென்றாரவர்.
சிலாங்கூர் மாநில அரசாங்க செயலக கட்டடத்தில், இரண்டாம் கட்ட கித்தா சிலாங்கூர் ஆம்புலன்ஸ் திட்டத்தை தொடக்கி வைத்தப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்தார்



