தென்னிந்தியாவின் 'நைட்டிங்கேல்' பாடகி எஸ்.ஜானகி மறைவு

12 ஜூலை 2026, 3:36 AM
தென்னிந்தியாவின் 'நைட்டிங்கேல்' பாடகி எஸ்.ஜானகி மறைவு

சென்னை, ஜூலை 7 - பிரபலப் பின்னணிப் பாடகி எஸ்.ஜானகி (88), வயது முதிர்வு காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டு கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.

அவரது மறைவு திரை உலகில் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய திரையுலகின் புகழ்பெற்ற பின்னணி பாடகியான எஸ். ஜானகி 'தென்னிந்தியாவின் நைட்டிங்கேல்' என்றும் அழைக்கப்படுகிறார்.

இவர் தமிழ், தெலுங்கு,கன்னடம்,மலையாளம்,இந்தி உட்பட பல இந்திய மொழிகளில் 48 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார்.

இவர் 4 முறை தேசிய விருது பெற்றுள்ளார்.பல பாடல்களைத் தாமே எழுதி இசையமைத்துப் பாடியுள்ளார்.

1958 ஆம் ஆண்டு முதல் பாடத் தொடங்கிய எஸ்.ஜானகி, விஸ்வநாதன் ராமமூர்த்தி, கேவி மகாதேவன், இளையராஜா, கங்கை அமரன், தேவா,ஏர்.ஆர் ரஹ்மான், அனிருத் என சுமார் 6 தலைமுறை இசையமைப்பாளர்கள் இசையில் பாடியுள்ளார்.

தமிழில் அவரை புகழின் உச்சிக்கு எடுத்துச் சென்ற படம் என்றால் அது இளையராஜா இசையில் அவர் அன்னக்கிளி திரைப்படத்தில் பாடிய பாடல்கள்தான்.

அந்தப் படத்திற்காக அவர் பாடிய அனைத்துப் பாடல்களுமே ஹிட் பாடல்கள் என்றாலும், அன்னக்கிளி உன்னைத் தேடுதே என்று தொடங்கும் பாடல் இவருக்குத் தனியொரு அடையாளத்தைப் பெற்றுத் தந்தது.

ஐந்து வயது குழந்தையின் குரலிலும், அறுபது வயது முதியவரின் குரலிலும் குரலை மாற்றிப் பாடக் கூடிய திறமையும் எஸ்.ஜானகியிற்கு உண்டு.

மௌன கீதங்கள்’ படத்தில் ‘டாடி... டாடி... ஓ மை டாடி உன்னைக் கண்டாலே ஆனந்தமே...’ எனும் ஒலிக்கும் மழலைக் குரல் எஸ்.ஜானகினுடையது.

கடந்த 2016ஆம் ஆண்டு தான் திரையுலகில் இருந்து ஓய்வு பெறுவதாக இவர் அறிவித்தார்.

எனது ரசிகர்கள்தான் எனக்குப் பெரிய விருது என்று எஸ். ஜானகி கூறியிருந்தது போல் ரசிகர்களின் மனங்களில் என்றைக்குமே அவருக்கு இடமிருக்கும்.

வகைantarabangsa

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.