ஆகஸ்ட் 1 முதல் My50 பாஸ் (PAS MY50) ஷா ஆலாமுக்கும் விரிவுப்படுத்தப்படும்

28 ஜூன் 2026, 8:47 AM
ஆகஸ்ட் 1 முதல் My50 பாஸ் (PAS MY50)  ஷா ஆலாமுக்கும் விரிவுப்படுத்தப்படும்

கிள்ளான், ஜூன் 28 - ஒரு மாத கால இலவசப் பயணம் முடிவுற்றப் பின்னர் ஆகஸ்ட் 1 முதல் My50 பாஸ் (PAS MY50) ஷா ஆலாமுக்கும் விரிவுப்படுத்தப்படுமென போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லொக் தெரிவித்தார்.

ஏற்கனவே My50 பாஸ் வாங்கியவர்கள் தற்போது ஷா ஆலாம் எல்ஆர்டி ரயில் பயணங்களின் போதும் பயன்படுத்த முடியுமென அவர் கூறினார்.

நாளை காலை மணி 6 தொடங்கி பொது மக்கள் ஷா ஆலாமுக்கான எல்ஆர்டி 3 சேவையைப் பயன்படுத்த முடியும்.

முதலாமாண்டில் நாளொன்றுக்கு 60,000 பேர் இச்சேவையைப் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.