நியு யோர்க், ஜூன் 28 - இங்கிலாந்தின் உலகக் கிண்ண வரலாற்றில் அதிகமான கோல் புகுத்திய ஆட்டக்காரராக சாதனைப் படைத்திருக்கின்றார் ஹாரி கேன் (Harry Kane).
நியு யோர்க் நியு ஜெர்சி அரங்கில், இங்கிலாந்து பனாமாவை 2-0 எனும் கோல் எண்ணிக்கையில் வீழ்த்திய ஆட்டத்தில், கேன் இந்த சாதனையைப் புரிந்தார்.
முன்னதாக, பனாமாவை வீழ்த்தி குழு நிலையில் முதல் இடத்தைப் பிடித்த இங்கிலாந்து நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது.
இங்கிலாந்தின் ஜூட் பெல்லிங்ஹாம் (Jude Bellingham) தட்டிக் கொடுத்தப் பந்தை தலையால் முட்டி கோலாக்கியதன் வாயிலாக, இதுவரையிலான உலகக் கிண்ண ஆட்டங்களில் கேன் மொத்தம் 11 கோல்களை அடித்துள்ளார்.
இதன் வாயிலாக, இங்கிலாந்து ஜாம்பவான் கேரி லைனக்கர் (Gary Lineker) வசம் இருந்த 10 கோல் எண்ணிக்கை சாதனையை கேன் முறியடித்தார்.



