கோலாலம்பூர், ஜூன் 24 - இவ்வாண்டு ஜனவரி முதல் ஜூன் 12-ஆம் தேதி வரையில் மொத்தம் 42, 807 தொழிலாளர்கள் வேலையிழந்தனர்.
அந்த வேலை இழப்புக்கு, வர்த்தக மூடல், நிறுவனங்களின் ஆட்குறைப்பு நடவடிக்கை ஆகியவையே முக்கிய காரணங்களாக இருந்திருப்பதாக மனிதவள அமைச்சர் டத்தோ ஶ்ரீ ஆர். ரமணன் தெரிவித்தார்.
அதிகமானோர் கோலாலம்பூர், அதையடுத்து சிலாங்கூர், தொடர்ந்து ஜோகூர் ஆகிய மாநிலங்களிலே வேலையிழந்திருப்பதாக அவர் மக்களவையில் கேள்வி பதில் நேரத்தின் போது தெரிவித்தார்.
தற்போதைக்கு AI செயற்கை நுண்ணறிவு, தொழிலாளர்களின் வேலைக்கு பெரும் மருட்டலாக இல்லையென்றாலும், எதிர்காலத்தில் தொழில்நுட்பவம் அத்தியாவசியமாகும்போது தொழிலாளர்கள் பின் தங்கிவிடாமல் இருக்க அவர்கள் AI தொடர்பான திறனைப் பெற்றிருப்பது அவசியமென அவர் குறிப்பிட்டார்.
கடந்த ஜனவரி முதல் MYFutureJobs அகப்பக்கத்தின் மூலமாக 6 லட்சத்து 5,168 வேலையிடங்களுக்கான விளம்பரம் செய்யப்பட்ட வேளையில், 1 லட்சத்து 88 ஆயிரத்து 62 பேர் வேலை தேடுவதாக அவர் கூறினார்.

