பட்டவொர்த், ஜூன் 20 - மலேசிய ஊடக கிளப் சங்கத்தில் (GKMM) உறுப்பியம் பெற்றுள்ள ஒவ்வொரு மாநில ஊடக கிளப்பிற்கு தலா 10,000 ரிங்கிட் ஊக்கத் தொகையை தொடர்ப்பு அமைச்சு வழங்கியுள்ளது.
அதோடு, GKMM சங்கம் ஊடகவியலாளர் நலன் திட்டங்களை மேற்கொள்ள 30,000 ரிங்கிட் வழங்கப்பட்டது.
அமைச்சு வழங்கியிருக்கும் இந்த தொகை ஊடகவியலாளர்களின் நலன் பேண உதவியாக இருக்குமென அமைச்சர் டத்தோ பாஹ்மி பட்சில் (Datuk Fahmi Fadzil) தெரிவித்தார்.
ஊடகப் பணியாளர்களின் சமுக நலப் பிரச்சனைகளை முன் வைப்பதிலும், ஊடகத் துறையின் எதிர்கால எதிர்பார்ப்புகளை அமைச்சின் பார்வைக்கு கொண்டு வருவதிலும் GKMM முக்கிய பங்கு வகிப்பதை அமைச்சர் சுட்டிக் காட்டினார்.
முன்னதாக அவர் நேற்று பட்டவொர்த்தில் மலேசிய ஊடக திட்டத்தை தொடக்கி வைத்து உரையாற்றியபோது அவ்வாறு கூறினார்.
ஒழுக்கம்,அனுபவம்,திறன் அடிப்படையில் ஒரு சம்பவம் குறித்த செய்திகளைச் சேகரிக்கும் ஊடகவியலாளர்களின் பணியை செயற்கை நுண்ணறிவால்( AI) எடுத்துக் கொள்ள முடியாது. ஊடகவியலாளர்கள் இன்றி செய்தி கிடையாது என்ற கடப்பாட்டினை அமைச்சு கொண்டுள்ளது. அதன் அடிப்படையில் ஊடகப் பணியாளர்களின் பணி நிலைநிறுத்தப்படுவதை அமைச்சு உறுதிசெய்யுமென பாஹ்மி கூறினார்.



