போலி மருத்துவச் சான்றிதழ்களை 50 - 200 ரிங்கிட் வரை விற்ற மோசடிக்காரர்கள்

17 ஜூன் 2026, 2:47 AM
போலி மருத்துவச் சான்றிதழ்களை 50 - 200 ரிங்கிட் வரை விற்ற மோசடிக்காரர்கள்

பெக்கான், ஜூன் 17- போலி மருத்துவச் சான்றிதழ்களை விற்ற விசாரணைத் தொடர்பில் தாதி உட்பட நால்வர் தடுத்து வைக்கப்பட்டனர்.

ஏமாற்று செயலுக்காக 33-லிருந்து 55 வயதுடைய அவர்கள் அனைவரும் மூன்றிலிருந்து நான்கு நாட்கள் தடுத்து வைக்க மாஜிஸ்திரேட் மெலோடி வூன் சி முன் (Melody Woon Sze Mun) உத்தரவிட்டார்.

தொடக்க விசாரணையில் போலி மருத்துவ சான்றிதழ்கள் தலா 50 ரிங்கிட்டிலிருந்து 200 ரிங்கிட் வரை விற்கப்பட்டது தெரிய வந்தது.

தடுத்து வைக்கப்பட்டவர்கள் அனைவரும் திங்கட்கிழமை பெக்கான் கம்போங் மர்ஹும் ( Kampung Marhum ) கம்போங் குவாலா பகாங் ( Kampung Kuala Pahang ) ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் கைது செய்யப்பட்டதாக பெக்கான் ஓசிபிடி சுப்ரிடெண்டன் மொஹமட் சைய்டி மாட் சின் ( Supt Mohd Zaidi Mat Zin ) தெரிவித்தார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.