6 உலகக் கிண்ண ஆட்டங்களில் விளையாடிய வரலாற்று நாயகன் லியோனல் மெஸ்ஸி

17 ஜூன் 2026, 2:16 AM
6 உலகக் கிண்ண ஆட்டங்களில் விளையாடிய வரலாற்று நாயகன் லியோனல் மெஸ்ஸி

கன்சாஸ் சிட்டி, ஜூன் 17 - மொத்தம் 6 உலகக் கிண்ண காற்பந்தாட்டங்களில் பங்கேற்று விளையாடிய வரலாற்றினைப் படைத்திருக்கின்றார் லியோனல் மெஸ்ஸி. இன்று தங்களது தொடக்க ஆட்டத்தில் அல்ஜிரியாவைச் சந்திக்கும் அர்ஜெர்ண்டினாவுக்காக களமிறங்கியிருக்கின்றார் லியோனல் மெஸ்ஸி.

முன்னணி ( ஸ்ட்ரைக்கர்) ஆட்டக்காரராக லௌதாரோ மார்டினெஸ் (Lautaro Martinez) களமிறங்கிய வேளையில் அவர் தாக்குதல் ஆட்டத்தில் மெஸ்ஸியுடன் இணைந்து செயல்படுவார்.

இவ்வேளையில், கணுக்கால் காயத்தில் இருந்து அட்லெட்டிகோ மாட்ரிட் ஆட்டக்காரர் ஹூலியன் ஆல்வரெஸ் (Julián Álvarez) குணமடைந்துள்ளார் என பயிற்றுனர் லியோனல் ஸ்கலோனி ( Lionel Scaloni ) கூறியிருந்தாலும் , அவர் மாற்று விளையாட்டாளர் வரிசையில் வைக்கப்பட்டிருக்கிறார்.

வகைsukankini

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.