சிலாங்கூர் எஃப்சி பயிற்சி மையத்தை சுற்றி உள்ள சாலைகள் நாளை தற்காலிகமாக மூடல் - எம்.பி.எஸ்.ஏ

5 ஜூன் 2026, 5:25 AM
சிலாங்கூர் எஃப்சி பயிற்சி மையத்தை சுற்றி உள்ள சாலைகள் நாளை தற்காலிகமாக மூடல் - எம்.பி.எஸ்.ஏ

ஷா ஆலம், ஜூன் 5: சிலாங்கூர் எஃப் சி பயிற்சி மையத்தை (Selangor FC Training Centre) சுற்றியுள்ள பகுதிகள் வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள், நாளை நடைபெறவுள்ள சிலாங்கூர் எஃப்சி கூட்டாளர் தின (Partners Day) நிகழ்ச்சியையொட்டி சில சாலைகள் தற்காலிகமாக மூடப் படவுள்ளதால், தங்களது பயணத்தை முன்கூட்டியே திட்டமிடுமாறு அறிவுறுத்தப் படுகிறார்கள்.

இந்நிகழ்ச்சியை சுமுகமாக நடத்துவதற்காக காலை 6 மணி முதல் 9 மணி வரை சாலை மூடப்படும் என ஷா ஆலம் மாநகர சபை (MBSA) தெரிவித்துள்ளது.

எம்.பி.எஸ்.ஏ-வின் கூற்றுப்படி, இந்நிகழ்ச்சிக்காக ஒதுக்கப்பட்ட பாதையில் இடதுபுறம் உள்ள சாலைகள் மட்டுமே மூடப்படும்.

"இந்தச் சாலை மூடல், நிகழ்ச்சி நடைபெறும் பாதையின் இடது புறத்தை மட்டுமே உள்ளடக்கியது" என்று ஃபேஸ்புக் வழியாக வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகையால், சாலை மூடப்படும் நேரத்தில் போக்குவரத்து நெரிசல் அல்லது தாமதத்தைத் தவிர்க்க, மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்துமாறும் பயணங்களை முன்கூட்டியே திட்டமிடுமாறும் பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

"அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பும் கவனமும் பாராட்டப்படுகிறது. இதனால் ஏற்படும் சிரமத்திற்கு வருந்துகிறோம்," என எம்.பி.எஸ்.ஏ தெரிவித்துள்ளது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.