நாட்டில் ஐந்து மாநிலங்களில் இடியுடன் கூடிய கனமழை - மெட்மலேசியா எச்சரிக்கை

4 ஜூன் 2026, 6:35 AM
நாட்டில் ஐந்து மாநிலங்களில் இடியுடன் கூடிய கனமழை - மெட்மலேசியா எச்சரிக்கை

கோலாலம்பூர், ஜூன் 4 – நாட்டின் ஐந்து மாநிலங்களில் இன்று பிற்பகல் 3 மணி வரை இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த மோசமான வானிலை நிலவரம் காரணமாகத் திராங்கானு மாநிலத்தின் டூங்குன் மற்றும் கெமாமான் ஆகிய பகுதிகளும், பகாங் மாநிலத்தின் ஜெராண்டுட் பகுதியும், சிலாங்கூர் மாநிலத்தின் உலு லங்காட் பகுதியும் பாதிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்ற கடுமையான வானிலை சூழல் நெகிரி செம்பிலான் மாநிலத்தின் ஜெலுபு, கோலா பிலா, ஜெம்போல் மற்றும் தம்பின் ஆகிய இடங்களிலும், ஜோகூர் மாநிலத்தின் செகாமட், குளுவாங், மெர்சிங், பொந்தியான், கூலாய், கோத்தா திங்கி மற்றும் ஜோகூர் பாரு ஆகிய சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் பொதுமக்கள் அனைவரும் தகுந்த பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.