ஜெம்போல், ஜூன் 2 : இங்குள்ள பாலோங் செம்பனைத் தோட்டத்தில் நேற்று முதல் முதியவர் ஒருவர் காணாமல் போயுள்ளார்.
நேற்று மாலை தோட்டத்திற்குச் சென்ற 78 வயதான அப்துல்லா அலியாஸ் என்பவர் இன்னும் வீடு திரும்பவில்லை என்றும், அவர் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மட்டும் தோட்டத்தில் கண்டுபிடிக்கப் பட்டதாகவும் தீயணைப்புத் துறையின் துணை கண்காணிப்பாளர் II முகமட் ஜெப்ரி ஜமால் தெரிவித்தார்.
"தேடுதல் மற்றும் மீட்புப் பணி (SAR) இன்று காலை 8.45 மணிக்கு தொடர்ந்தது. சம்பவ இடத்திற்கு மலேசிய சிறப்பு தந்திரோபாய மற்றும் மீட்புக் குழுவின் (STORM) மூன்று உறுப்பினர்களின் உதவியையும் செயல்பாட்டு இயக்க மையம் (PGO) கோரியுள்ளது," என்றார் அவர்.
"மாலை 5 மணிக்கு வீட்டை விட்டு வெளியேறிய முதியவர் சுமார் ஒரு மணி நேரம் ஆகியும் வீடு திரும்பாதது தெரியவந்தது. அதன்பிறகு அவரது குடும்பத்தினர் இரவு 7 மணி வரை தோட்டத்தில் தேடியுள்ளனர். எனினும், அவர் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிளை மட்டுமே அவர்களால் கண்டுபிடிக்க முடிந்தது," என்று இன்று வெளியிட்ட அறிக்கையில் அவர் குறிப்பிட்டார்.
4.04 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட தோட்டத்தில் நடைபெறும் இந்த தேடுதல் மற்றும் மீட்புப் பணியில், பாலோங் தன்னார்வத் தீயணைப்புப் படையின் (PBS) நான்கு உறுப்பினர்கள், மூன்று காவல் துறையினர் மற்றும் எட்டு பொதுமக்கள் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
செம்பனைத் தோட்டத்தில் முதியவர் மாயம், தேடுதல் மற்றும் மீட்புப் பணி விரிவு
2 ஜூன் 2026, 9:30 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
வகைnational
உங்கள் கருத்து என்ன?



