ஷா ஆலம், ஜூன் 2 : பத்தாங் காலி, பண்டார் உத்தாமாவில் உள்ள தாமான் மடாணி ரக்யாட் (Taman Madani Rakyat) மேம்பாட்டுப் பணிகள், ஒரு மாத கட்டுமானத்திற்குப் பிறகும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. குடியிருப்பாளர்களுக்கு மேலும் வசதியான மற்றும் பாதுகாப்பான பொழுதுபோக்கு வசதிகளை வழங்குவதற்காக இந்தத் திட்டம் முன்னெடுக்கப் படுகிறது.
கோலா குபு பாரு சட்டமன்ற உறுப்பினரான பாங் சோக் தாவ் (Pang Sock Tau) கூறுகையில், உள்ளூர் சமூகம் தங்களின் ஓய்வு நேர நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஏற்ற பொழுதுபோக்கு இடத்தைப் பெறுவதை உறுதி செய்யும் நோக்கிலேயே இத்திட்டம் செயல் படுத்தப்படுகிறது என்றார்.
அவரின் கூற்றுப்படி, பூங்காவின் பல முக்கியப் பகுதிகள் இன்னும் கட்டுமானப் பணிகளில் இருப்பதாகவும், அது முழுமையாக நிறைவடையவில்லை எனவும் தெரிவித்தார்.
கால்பந்து மைதானம், புட்சல் (futsal) மைதானம் மற்றும் பூங்கா பகுதியின் தரைப்பகுதி தொடர்பான வேலைகள் ஆகியவை தற்போது மேம்படுத்தப் பட்டு வரும் வசதிகளில் அடங்கும் என்று அவர் கூறினார்.
"இந்தத் திட்டத்தை உடனடியாக முடிக்குமாறும், கட்டுமானப் பணிகளின் தரத்தையும் நேர்த்தியையும் உறுதி செய்யுமாறும் ஒப்பந்ததாரர்களிடம் கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளது," என அவர் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இன்று மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பின் போது, இத்திட்டத்தின் முன்னேற்றத்தை நேரில் பார்வையிட்டப் பின்னர் அவர் இவ்வாறு கூறினார்.
இந்தப் பார்வையிடலில் உலு சிலாங்கூர் நகராண்மைக் கழகத்தின் (MPHS) நிலத்தோற்றத் துறை (Jabatan Landskap) அதிகாரிகள், கிராமத் தலைவர்கள் மற்றும் மன்ற உறுப்பினர்கள் ஆகியோரும் கலந்து கொண்டு தளத்தின் வேலை முன்னேற்றத்தை மதிப்பிட்டனர்.
திட்டப் பணிகள் சுமுகமாக நடைபெறுவதை உறுதி செய்வதோடு, பொது பயன் பாட்டிற்காக வழங்கப்படும் பொது வசதிகளைப் பராமரிப்பதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
பூங்காவின் வசதிகளை சேதப்படுத்தும் வகையிலான நாசவேலைகளில் (vandalisme) ஈடுபட வேண்டாம் என குடியிருப்பாளர்களை, குறிப்பாக இளைஞர்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.
"விளையாட்டு பூங்காவின் மெதுவோட்டம் (jogging) பாதையில் புகைப்பிடித்தல், சமைத்தல் மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டுதல் போன்ற நடவடிக்கைகள் நடைபெறுவதை நாங்கள் கண்டறிந்துள்ளோம்," என்று அவர் கூறினார். மேலும், பொது நலனுக்காக இந்தப் பூங்காவை மதித்துப் பாதுகாக்க வேண்டும் என்றும் குடியிருப்பாளர்களை அவர் கேட்டுக்கொண்டார்.
தாமான் மடாணி ரக்யாட் மேம்பாட்டுப் பணிகள் சுமுகமாக நடைபெறுகின்றன; மேலும் வசதியான, பாதுகாப்பான பொழுதுபோக்கு வசதிகள் அமையவுள்ளன
2 ஜூன் 2026, 9:15 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
உங்கள் கருத்து என்ன?




