மாமன்னரின் அதிகாரப்பூர்வ பிறந்தநாள்: சிலாங்கூர் சுல்தான், தெங்கு பெர்மைசூரி வாழ்த்து

2 ஜூன் 2026, 2:26 AM
மாமன்னரின் அதிகாரப்பூர்வ பிறந்தநாள்: சிலாங்கூர் சுல்தான், தெங்கு பெர்மைசூரி வாழ்த்து

ஷா ஆலம், ஜூன் 2: மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் அவர்களின் அதிகாரப்பூர்வ பிறந்தநாளையொட்டி, சிலாங்கூர் சுல்தான் ஷராபுதீன் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் மற்றும் சிலாங்கூர் தெங்கு பெர்மைசூரி ஹஜா நோராஷிகின் ஆகியோர் தங்களின் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர்.

சிலாங்கூர் அரச அலுவலகத்தின் (Selangor Royal Office) அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் சுல்தான் ஷராபுதீன் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், மாமன்னர் நீண்ட ஆயுளுடனும், நற்பாக்கியங்களுடனும், சிறந்த ஆரோக்கியத்துடனும் வாழ இறைவனைப் பிரார்த்திப்பதாகக் குறிப்பிட்டார். மேலும், நாட்டைப் பாதுகாக்கவும், மக்களை மிகுந்த விவேகத்துடனும் அதிகாரத்துடனும் வழிநடத்த மாமன்னருக்கு இறைவனின் அருளும் பாதுகாப்பும் கிடைக்க வேண்டும் என்றும் அவர் வாழ்த்தினார்.

"தேசியக் கோட்பாடுகளை (ருகுன் நெகாரா) பின்பற்ற விரும்பாத எந்தவொரு தனிநபரும் மலேசியக் குடிமகன் என்று அழைக்கப் படத் தகுதியற்றவர் என்ற மாமன்னரின் கருத்தை முழுமையாக ஆதரிக்கிறேன்; அதனை வரவேற்கிறேன்," என்றும் சுல்தான் ஷராபுதீன் தனது அறிக்கையில் தெரிவித்தார்.

நாட்டின் பல்லின மக்களிடையே நல்லிணக்கத்தையும் அமைதியையும் உறுதி செய்யும் பொருட்டு, பொதுமக்களும் குறிப்பாக இளைய தலைமுறையினரும் தேசியக் கோட்பாடுகளில் பொதிந்துள்ள நற்பண்புகளைப் புரிந்து கொண்டு, உணர்ந்து, தங்கள் வாழ்வில் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இதற்கிடையே, மாமன்னரும், பேரரசியாரும் சிறந்த ஆரோக்கியத்துடனும், நல்வாழ்வுடனும், இறைவனின் முழுமையான அருளோடும் பாதுகாப்போடும் வாழ மாநில அரசாங்க நிர்வாகமும், சிலாங்கூர் மக்கள் அனைவரும் பிரார்த்திப்பதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

"மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் அவர்களின் அதிகாரப்பூர்வ பிறந்தநாளில் எனது மனமார்ந்த வாழ்த்துகளைச் சமர்ப்பிக்கிறேன். அன்புக்குரிய மலேசியாவின் செழிப்புக்காக, நாட்டை மிகுந்த நீதியுடனும் விவேகத்துடனும் வழிநடத்த மாமன்னருக்கு இறைவனின் அருளால் தொடர்ந்து ஞானமும் வலிமையும் கிடைக்கட்டும்" என அமிருடின் தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.