ஜோகூர் பாரு (ஜூன் 1) ஜோகூர் மாநில மந்திரி புசார் டத்தோ ஓன் ஹபீஸ் காசி இன்று திங்களன்று ஜோகூர் சௌஜானாவில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் நடந்தய ஒரு சிறப்பு செய்தியாளர் கூட்டத்தில்.
ஜோகூர் பாரு (ஜூன் 1) இன்று திங்கள் ஜோகூர் மாநில சட்டமன்றம் கலைக்கப்பட்டது, இது ஒரு புதிய மாநில தேர்தலுக்கு வழி வகுப்பதாக அறிவித்தார்.
திங்கட்கிழமை பிற்பகல் இங்குள்ள சௌஜானாவில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் ஒரு சிறப்பு செய்தியாளர் கூட்டத்தில் ஜோகூர் மந்திரி புசார் டத்தோ ஓன் ஹபீஸ் காசி மாநில சட்டமன்ற கலைப்பை அறிவித்தார்.
இன்று திங்களன்று முன்னதாக ஜோகூரின் ரீஜண்ட் துங்கு மஹ்கோத்தாவை கண்டப்பின் மாட்சிமை மிக்க அவரின் ஒப்புதலைத் பெற்றதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ஓன் ஹபீஸ் கூறினார்.
ஜோகூர் 1895 அரசியலமைப்பின் சட்டங்கள் பகுதி II இன் பிரிவு 23 இன் படி சட்டமன்ற கலைப்பு மேற்கொள்ளப்பட்டதாக ஓன் ஹபீஸ் கூறினார்.
தேர்தல் ஆணையத்தின் அறிவிப்புக்கு உட்பட்டு, ஜோகூர் மாநிலம் தேர்தலின் மூலம் ஜனநாயக செயல் முறைக்கு வழிவகுக்கும் நோக்கில் இந்த கலைப்பு செய்யப்பட்டுள்ளது.
"ஜோகூர் மக்கள் தொடர்ந்து ஒரு நிலையான மற்றும் வலுவான அரசாங்கத்தால் சேவை செய்யப்படுவதை உறுதி செய்வதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டது, என்று அவர் கூறினார்.
ஜோகூர் மக்களிடையே நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் பாதுகாக்க தேர்தல் செயல்முறை முழுவதும் ஒழுக்கத்துடனும், முதிர்ச்சியுடனும், மரியாதையுடனும் நடந்து கொள்ளுமாறு அனைத்து அரசியல் கட்சிகள், தலைவர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.
2022 ஜோகூர் தேர்தலில், பாரிசன் நேஷனல் போட்டியிட்ட 56 இடங்களில் 40 இடங்களை வென்று, மாநில சட்டசபையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெற்றது. பக்காத்தான் ஹரப்பான் 12 இடங்களையும், பெரிக்காத்தான் நேஷனல் மற்றும் மூடா முறையே மூன்று மற்றும் ஒரு இடத்தையும் வென்றன.




